நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறது. இந்த மாதத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரஜினி இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க நெல்சன் திட்டமிட்டுள்ளார்.அவர்கள் நடிக்கும் காட்சிகளுடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து பூசணிக்காய் உடைக்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 173 என இந்த படத்துக்கு டெம்பரரி டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பேமிலி டிராமா கதைக்களத்தில் எண்டர்டெயின்மென்ட் மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஆக்சன் படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் குடும்ப பின்னணியில் ஒரு சென்டிமென்ட் படத்தில் நடிக்க விரும்பி இந்த கதையை செலக்ட் செய்துள்ளார்.
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதி துவங்கி வருகிற அக்டோபர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடையும்.
அடுத்த 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது.
தலைவர் 173 ஷூட்டிங் வரும் அக்டோபரில் முடிவடைய இருப்பதால் நவம்பர் மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளில் நவம்பர் 7ம் தேதி அல்லது டிசம்பர் மாதம் ரஜினி பிறந்த நாளில் டிசம்பர் 12ம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முதல் நபராக நடிகை பிரியங்கா மோகன் கமிட் செய்யப்பட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





