- Advertisement -
Homeபொழுதுபோக்குமகளின் மறைவால் மனம் வாடிய இசைஞானி இளையராஜா - தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியான...

மகளின் மறைவால் மனம் வாடிய இசைஞானி இளையராஜா – தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியான அவரது எமோஷனல் பதிவு

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள் இருக்கின்றனர். 3வது மகள் பெயர் பவதாரணி. ஆனால் குடும்பத்தினர் எல்லோரும் செல்லமாக பவதா என அழைப்பதுதான் வழக்கம். இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜிக்கும் தங்கை பவதாரிணி மீது கொள்ளை பிரியம்.

சிறுவயதில் இருந்தே விமானத்தில் செல்வதென்றால் பவதாரணிக்கு அதிக பயம் இருந்திருக்கிறது. இதற்கு ப்ளைட்போபியா என்ற பாதிப்பே காரணமாம். அதனால் அவரது வாழ்க்கையில் ஓரிரு முறை மட்டுமே பிளைட்டில் சென்றிருக்கிறார். இதனால் வெளிநாடுகளில் இளையராஜா, யுவன்சங்கர் ராஜா நடத்திய இசைக்கச்சேரிகளில் பவதாரணியால் பலமுறை பங்கேற்க முடியாமல் போயிருக்கிறது.

- Advertisement -

இளையராஜா மகளாக இருந்தும், பவதாரணி மிக எளிமையான பண்புகளும், பழக்கங்களும் கொண்டவராக மற்றவர்களிடம் பழகி இருக்கிறார். தனக்கு உடல்ரீதியான பாதிப்புகள் வந்த போது, அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகள் பெற்று தற்காலிக வலி நிவாரணம் பெற்ற நிலையில், முழுமையான உடல் பாதிப்பு என கவனிக்காமல் இருந்து விட்டார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதே தெரிய வந்திருக்கிறது. இதை கேட்டதும் இளையராஜா நொறுங்கி போயிருக்கிறார். ஆனால் சில மாதங்களாகவே இளையராஜா மனதுக்குள் ஏதோ பெரியதாக கெடுதல் நடக்கப் போகிறது என்ற ஒரு கலக்கம் இருந்து வந்துள்ளது. அதை மகன்களிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதாவது தனது தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோரது நினைவு நாளில் சொந்த ஊருக்கு அனைவரும் குடும்பத்துடன் சென்று திதி கொடுப்பது வழக்கம். அது இந்த ஆண்டு நடக்கவில்லை. அதேபோல் கார்த்திகை தீபத்தன்று அவரது வீட்டில் விளக்கேற்ற ஆளின்றி இருண்டு போய் இருந்துள்ளது. இந்த சம்பவங்களால் இளையராஜா மனம் கலங்கிய நிலையில் பவதாரணி இறந்திருக்கிறார். இப்போது இளையராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் அன்பு மகளே என குறிப்பிட்டு, தனது மகள் பவதாரணி குழந்தையாக தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்