- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு தியேட்டர்ல என் படத்தை போடுங்க என முதலில் கெஞ்சினேன், அப்புறம் 4 வாரத்துக்கு அப்புறம்...

ஒரு தியேட்டர்ல என் படத்தை போடுங்க என முதலில் கெஞ்சினேன், அப்புறம் 4 வாரத்துக்கு அப்புறம் அது நடந்துச்சு – இயக்குனர் சேரன் சொன்ன தரமான சம்பவம்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, ஆட்டோகிராப் படம் என்ன பண்ணுச்சுன்னா படம் ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கும்போது யாரும் தியேட்டர் கொடுக்கலே. ரொம்ப கெஞ்சி கெஞ்சி தான் தியேட்டர் வாங்கினேன். ஏன்னா இயக்குனர் ஹீரோ ரெண்டுமே சேரன் 4 ஹீரோயின் படத்துல என்ன இருக்குதுன்னு தெரியல அவங்களுக்கு. தேவி சினிமா தேவிபாலா சின்ன தியேட்டர் அந்த முதலாளி கிட்ட நானே போய் பேசினேன். சொல்ல மறந்த கதை ஓடியதற்காக உங்களுக்கு ஒரு வாரம் தரேன்னு சொன்னார். அப்படி ரிலீஸ் பண்ணிய படம். ஒரு வாரத்துக்கு அப்புறம் அதே தேவி தியேட்டர் முதலாளி போன் பண்ணி படம் நல்லா போகுது தேவிகலாவுல போட்டுக்கலாமா என்று கேட்டார். 4வது வாரம் போன் பண்ணி சார் 2 தியேட்டர்களையும் படம் செமையா போயிட்டு இருக்கு. நான் தேவி பாரடைசில் போட்டு இருக்கிறேன்னு சொன்னார். 5வது வாரம் தேவியிலேயும் போட்டுகிறேன் என்று சொல்லி நாலு தியேட்டரிலும் ஆட்டோகிராப் தான் ஓடிச்சு என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்