- Advertisement -
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, நான் குணா படம் பார்த்துட்டு என்ன ஒரு படம் இதை யார் எடுத்தது? இது தமிழ் படமா அப்படின்னு பல ஆயிரம் கேள்விகள் மனசுக்குள்ள வந்தது. மறுபடியும் அந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் என்னை ஏதோ ஒண்ணு பண்ணுது. இந்த மாதிரி ஒரு சினிமா பண்ணனும்னு நினைக்கிறேன். அங்கிருந்துதான் என்னோட சிந்தனை செயல்முறை மாறுது. சந்தானபாரதி சாரோட அடுத்த படமாக மகாநதி படத்தில் அவர் கூட வேலை செய்கிறேன். அங்கு எடுக்கிற விதம் எல்லாமே மாறுது. ஒரு ஸ்கூல்ல இருந்து வேற ஸ்கூல் போன மாதிரி இருக்குது. அங்க பாத்து கத்துகிட்டு இதுதான் நாம போக வேண்டிய பாதை அப்படின்னு நான் பண்ணிய படம்தான் பாரதி கண்ணம்மா என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.





