- Advertisement -
இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதைப் பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரி செய்து விடமாட்டோமா? இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்லி சரி செய்ய நினைப்பவன். ஒரு உயிர் போய்விட்டால் அவனை நம்பி பல உயிர்கள் இருக்குமே என கவலைப்படுபவன் நான். வாட்டர் மெலன் திவாகர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்து விடப் போகிறதா என்ன? என்றும் தனது பதிவில் கூறியிருக்கிறார்.





