- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் மம்முட்டி, கடைசியில் அவர் ஆசைப்பட்டது எந்த கேரக்டர்...

அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் மம்முட்டி, கடைசியில் அவர் ஆசைப்பட்டது எந்த கேரக்டர் தெரியுமா? – இயக்குனர் சேரன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு ஆட்டோகிராப் இன்னொரு தேசியகீதம் தவமாய் தவமிருந்து என அவரது படங்கள் என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவை.

வரும் மே 16ம் தேதி சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சிறந்த படமாகும். 3 தேசிய விருதுகளை ஆட்டோகிராப் பெற்றது. பள்ளி கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கூறியதாவது, நடிகர் ராஜ்கிரண் ஒரு பண்பட்ட நடிகர். எந்த கேரக்டராக இருந்தாலும் மிக சிறப்பாக நடிக்க கூடியவர். அவர் ஒரு கேரக்டரை உள்வாங்கி நடித்து விட்டால், அந்த கேரக்டரில் மற்றொரு நடிகரை நினைத்து பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு முழு அளவில் அந்த கேரக்டரை சிறப்பாக தந்து விடுவார்.

பாண்டவர் பூமி படத்தில் ஒரு பக்குவப்பட்ட அண்ணன் கேரக்டரில் நடித்த அவர், இயக்குனர் பாலா இயக்கிய நந்தா படத்தில் ஒரு டான் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த மாறுபட்ட கேரக்டர்களில் அவர் நடித்த பிறகுதான் அவரது சினிமா பயணத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. அதன்பிறகு தவமாய் தவமிருந்து படத்தில் எனக்கு அப்பாவாக பிரஸ் கம்பெனி ஓனராக நடித்திருப்பார்.

- Advertisement -

ஆனால் தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் முதலில் நான் யோசித்தது மலையாள நடிகர் மம்முட்டியை தான். அவரை நேரில் சந்தித்து முழுக்கதையும் சொன்னேன். கதையை கேட்ட பின் மிகவும் பிடித்ததாக கூறிய அவர், அப்பா கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டார். அவரது 2வது மகன் கேரக்டரில் நடிக்கிறேன் என்றார்.

அந்த படத்தில் 2வது மகன் கேரக்டரில் நடிக்க இருந்தது நான்தான். என்னுடைய கேரக்டரில் நடிக்க அவர் ஆசைப்பட்டு கேட்டார். இல்லை சார், அது சரியாக வராது என்று நான் கூறியதால் அப்பா மகன் என 2 கேரக்டர்களிலும் நானே நடிக்கிறேன் என்றார். அப்படி இரட்டை வேடத்தில் அந்த கேரக்டர்கள் வந்தால் நன்றாக இருக்காது என்பதால், பிறகு அவர் நடிக்கவில்லை. அதன்பிறகுதான் அதில் ராஜ்கிரணை நடிக்க செய்தேன், என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்