- Advertisement -
Homeபொழுதுபோக்குசும்மா சிரிக்காதீங்கய்யா… தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு கோஷமிட்ட காமெடி நடிகர் கூல் சுரேஷ் - இவருக்கு...

சும்மா சிரிக்காதீங்கய்யா… தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு கோஷமிட்ட காமெடி நடிகர் கூல் சுரேஷ் – இவருக்கு என்ன பிரச்னை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர் கூல் சுரேஷ். சிம்புவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவ்வப்போது ஏதாவது பொதுவெளியில் காமெடி செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார். சமீபத்தில் இந்தியன் 2 படத்துக்கு இந்தியன் தாத்தா கெட்டப்பில் குதிரையில் வந்திருந்தார்.

அதே போல் புதிய படங்கள் வெளியாகும் போது அந்த படங்கள் குறித்து ஊடகங்கள் மத்தியில் தனது விமர்சனத்தை பகிரங்கமாக செய்வார். சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் பெண்ணுக்கு கழுத்தில் மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டவர்தான் கூல் சுரேஷ்.

- Advertisement -

சமீபத்தில் யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்க வேண்டிய மஞ்சள் வீரன் படத்தில் இருந்து அவரை இயக்குனர் நீக்கி விட்டதால், அந்த படத்தில் கூல் சுரேஷ்தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்த படத்தில் இயக்குனர், இந்த படத்தின் புதிய நாயகனை அறிவிப்பதாக தெரிவித்ததால், கூல் சுரேஷ் நடிக்கவில்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி, கோவையில் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார். இது தமிழ்நாடு முழுவதும் வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழலில் இன்று நடிகர் கூல் சுரேஷ் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்ளும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் படம் நேற்று வெளியான நிலையில் அந்த படத்தின் பிரமோசனுக்காக கூல் சுரேஷ் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு கோஷமிடுகிறார்.

திரு மாணிக்கம் படத்தின் போஸ்டர் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு திரு மாணிக்கம் திரு மாணிக்கம் திரு மாணிக்கம் ரைக்டர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் திருப்பதி பிரதர்ஸ் போஸ் போஸ் என்று கூறியபடி அவர் பேண்ட் மட்டுமே அணிந்த நிலையில் வெற்று மார்புடன் நின்று சவுக்கால் அடித்துக்கொள்கிறார். இதை பார்த்து சிலர் குலுங்கி குலுங்கி சிரித்தாலும், டிரண்டிங் விஷயத்தை கப்புன்னு கூல் சுரேஷ் பிடிச்சிட்டாரே என்று பாராட்டவும் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்