- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய படங்களை மிஷ்கின் அப்படி கிண்டல் செய்தார், ஆனால் நான் அவரது இயக்கத்தில் விரும்பி நடித்தேன்...

என்னுடைய படங்களை மிஷ்கின் அப்படி கிண்டல் செய்தார், ஆனால் நான் அவரது இயக்கத்தில் விரும்பி நடித்தேன் – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் நல்ல படைப்பாளியாக ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக அவரது முதல் படம் சித்திரம் பேசுதடி 2வது படம் அஞ்சாதே அடுத்து அவர் இயக்கிய துப்பறிவாளன், சைக்கோ என மிஷ்கின் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு விதத்தில் வித்யாசமான ஒரு கதைக்களத்தில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கிற படங்களாக தான் இருந்திருக்கின்றன.

அடுத்து அவரது இயக்கத்தில் டிரெயின் பிசாசு 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன. மிஷ்கினை பொறுத்த வரை நல்ல இயக்குனராக இருந்தாலும் வாயில் வந்ததை எல்லாம் வெளிப்படையாக பேசி விடும் ஒரு மனிதராகவும் இருக்கிறார். யாரையும் ஒருமையில் பேசுவதும், திடீரென மேடையில் ஆபாச வார்த்தைகளை அவர் பேசுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் இயக்குனர் சேரன் நாயகனாக நடித்திருந்தார். சேரன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். மனங்களை தொடும் படைப்புகளை தருவதில் சேரன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, யுத்தம் செய் படம் எடுப்பதற்கான வாய்ப்பை நான்தான் உருவாக்கினேன். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டராக ஒரு படம் பண்றதுக்கு அக்ரிமெண்ட் போட்டுட்டேன். அப்ப தான் அந்த தயாரிப்பாளர், மிஷ்கின் சார் ஒரு கதை சொன்னார். அது உங்களுக்கு கூட பிரமாதமாக பொருந்தும். நீங்க நடிக்கிறீங்களா என்று கேட்டார்.

- Advertisement -

அப்போ நாம நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அதனால் நானேதான் மிஷ்கினை கூப்பிட்டு பேசினேன். என் சம்பளத்தை கூட கொஞ்சம் குறைச்சுக்கிட்டு அவருடைய டைரக்சனில் நடிக்கணும் என்று யுத்தம் செய் படத்தில் நடித்தேன். ஆனால் மிஷ்கின் எங்கேயாவது பேசும்போது, நான் சேரன் சார் படத்தை பார்த்தால் தூங்கிடுவேன் என்பார். அது எனக்கு சிரிப்பாக இருக்கும்.

சரி ஓகே, அவருக்கு நம்ம படம் பிடிக்கலே. ஆனா எனக்கு அவர் படம் ரொம்ப பிடிக்கும் என்று இயக்குனர் சேரன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். பல ஹிட் படங்களை தந்த பெரிய இயக்குனர் சேரன், சமகால இயக்குனர் மிஷ்கின் குறித்து இப்படி சகஜமாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்