- Advertisement -
Homeபொழுதுபோக்குதள்ளிப்போகும் எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு... அப்டேட் கேட்ட ரசிகர்... இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா?...

தள்ளிப்போகும் எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு… அப்டேட் கேட்ட ரசிகர்… இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா?…

- Advertisement -

மாநாடு, வெந்து தணிந்தது காடு என இரண்டு வெற்றிகளை கொடுத்த சிலம்பரசன், அடுத்ததாக ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்தார். கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது. இதன்பிறகு சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

அவர் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் அவர் இணைய போவதாகவும், இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

துல்கர் சல்மானை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, முதல் படத்திலேயே பலராலும் கவனிக்கப் பட்டார். அந்த படத்தை பார்த்த ரஜினி, தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறும், தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ரஜினிக்காக கதை உருவாக்கும் வேலையில் இறங்கினார் இயக்குனர். இதற்கான பணிகளும் நிறைவடைய, இடையில் கொரோனா ஊரடங்கு காலம் குறுக்கிட்டதால் ரஜினி படத்திற்கான வேலைகள் தள்ளி போனது. இந்த நேரத்தில்தான், யாரும் எதிர்பாராத வகையில், கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும், இதில் சிம்பு கதாநாயகனாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

எஸ்.டி.ஆர் 48வது படமாக உருவாகும் இந்த திரைப்படம், வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், படத்திற்காக அவர் நீண்ட முடியுடன் காட்சி அளிக்கிறார். இதில் முக்கிய ரோலில், கமல்ஹாசன் நடிப்பதாகவும் பேசப்படுகிறது.

இருப்பினும் எஸ்.டி.ஆர் 48 பட அறிவிப்பிற்கு பின்னர், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. இது குறித்து ரசிகர் ஒருவர், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் இணையத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இயக்குனர், அப்டேட் விரைவில் வரும் என்று பதில் அளித்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்