- Advertisement -
Homeபொழுதுபோக்குநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ் தெரியுமா? ஆனா இயக்குனர்...

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ் தெரியுமா? ஆனா இயக்குனர் தனுஷ் அப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே?

- Advertisement -

நடிகர் பாடகர் தயாரிப்பாளர் என்ற அடையாளங்களை கடந்து இப்போது இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டியிருக்கிறார் நடிகர் தனுஷ். ப பாண்டி ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3வதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வருகிற 21ம் தேதி ரிலீஸாகிறது. அடுத்து தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது.

நடிகராக தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் தனுஷின் அபார உழைப்பு ரசிகர்களை, சினிமா துறையினரை வியக்க வைக்கிறது. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அடுத்தடுத்த லைன் அப்பில் தனுஷ் மிகவும் பிஸியாக உள்ளார். இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 2 பாகங்களாக உருவாகும் இளையராஜா பயோபிக் படத்திலும் நடிக்கிறார்.

- Advertisement -

தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை நாயகனாக தனுஷ் அறிமுகப்படுத்தி உள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தை இயக்குனர் தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார். அனிகா சுரேந்திரன் மாத்யூ தாமஸ் பிரகாஷ் பிரியா வாரியர் வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து கோல்டன் ஸ்பாரோ என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆகியுள்ளது.

- Advertisement -

கோல்டன் ஸ்பாரோ பாடல் காட்சியில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் 10ம் தேதி ( நாளை) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியும் உள்ளது.

ஆனால் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரமோசன் நிகழ்ச்சிகளில் படத்தின் இயக்குனர் நடிகர் தனுஷ் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி நடிகர் தனுஷ் கூறுகையில், இந்த படத்தை பொருத்த வரை அந்த படத்தில் நடித்த, பணியாற்றிய கலைஞர்கள்தான் மிக முக்கியம். அவர்கள்தான் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட வேண்டும். நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டால், என் மீதே அனைவரது கவனமும் இருக்கும். அதை தவிர்க்கவே, இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்