தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அவர் இயக்கிய டிராகன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் நடிகர் சிம்பு நடிக்கும் 51வது படத்தையும் இயக்க கமிட் ஆகியிருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை டிராகன் படம் பெற்றது.
திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கிய இந்த விருதை டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி இருவரும் மேடையில் பெற்றுக் கொண்டனர். அப்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விழாவில் பேசினார்.
அப்போது அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, எஸ்டிஆர் இப்போது அரசன் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் படத்தை முடித்துவிட்டு வந்த உடனே எஸ்டிஆர் 51 படத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். தர்மன் சூப்பர் ஸ்டார் படம். அதுவும் கமல்ஹாசன் சார் தயாரிப்பில் உருவாகிறது. அதனால் இந்தப் படத்தில் எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது.
ரஜினி சாருக்கு வயசான மாதிரியே தெரியவில்லை. படையப்பா படத்தில் இருபது வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு வயசானதே தெரியலைங்கிற மாதிரி எனக்கு இப்பவும் அப்படியே தான் இருக்கு. ரொம்ப ஜாலியாக இருக்கிறார். தர்மன் ரொம்பவும் ஸ்பெஷலான படம். தமிழ் ஆடியன்ஸ் இந்தியன் ஆடியன்ஸ் என எல்லாருக்குமே ரொம்ப நேர்த்தியான ஒரு நல்ல படமாக இது இருக்கும். அதாவது தலைவருடைய ஃபேன்ஸ் தலைவருடைய ஸ்வாக்ஸ் தலைவருடைய எல்லாமே நம்ம ஸ்டைலில் ஜாலியா அப்படியே இருக்கும்.
நிறைய இயக்குனர்களோட கனவு ரஜினி சாரோட கமல் சாரோட படம் பண்ணனும்ன்னு இருக்கும். அதை நான் பண்றேன்னு பெரிய கடமை எனக்கு இருக்கு. தர்மன் படம் பிளாஸ்ட்டாக இருக்கும். தலைவருடைய முதல் நாள் ஷூட்டிங்கில் காரில் இருந்து இறங்கி வந்து மருத்துவமனைக்கு செல்வது போல வைத்தோம். மானிட்டர் பார்த்து எனக்கு ஸ்வாக்காக இருந்தது. விசில் அடித்து அங்கேயே என்ஜாய் பண்ணினேன் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பேசியிருக்கிறார்.





