தமிழ் சினிமாவில், ஹீரோக்களுக்கான கதைகள்தான் உருவாக்கப்படுகின்றன. கதை என்பது ஹீரோவை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். கதையை மையப்படுத்தி ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவின் பெரிய சாபக்கேடு இதுதான். அதனால்தான் தமிழ் சினிமா தொடர்ந்து தோற்கிறது. கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் மலையாள படங்கள் மிகப்பெரிய அளவில் ஜெயிக்கின்றன. இதுதான் மலையாள படங்களின் வெற்றியின் சூட்சுமம்.
இயக்குனர் கோபி நயினார் தமிழில் அறம் என்ற மிகச் சிறந்த படத்தைத் தந்தவர். இவர் ஏற்கனவே டைரக்டர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அப்போது கோபி நயினார் சொன்ன கதையை வைத்து, டைரக்டர் ஏஆர் முருகதாஸ், ஹீரோவாக நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தை இயக்கினார். விவசாயிகளின் போராட்டங்கள் பற்றிய அற்புதமான இந்த படத்தின் கதையை கோபி நயினாரிடம் இருந்து ஏ.ஆர். முருகதாஸ் காப்பியடித்து ஏமாற்றிவிட்டார் என்பதை உண்மை.
ஆனால் அதை அப்போது கோபி நயினார் புகார் சொன்னபோது யாரும் அதை ஏற்கவில்லை. அதன் பிறகு உண்மையை தெரிந்துக் கொண்ட நடிகை நயன்தாரா, கோபி நயினாரை நேரில் வரவழைத்து அறம் என்ற படத்தை இயக்க சம்மதித்தார். அவரே அதில் ஹீரோயினாகவும் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கோபி நயினார் டைரக்ட் செய்துள்ள படம் மனுசி. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியான நிலையில் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மிகச்சிறந்த ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று டீசரை பார்த்த பலரும் வெளிப்படையாக கூறி பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு நேர்காணல் பேசிய அறம், மனுஷி படங்களின் இயக்குனர் கோபி நயினார், தமிழ் சினிமாவை வாழவைக்கும் எண்ணம் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இல்லை. என்னை எந்த ஹீரோவும் மதிக்கவில்லை. நான் சொன்ன கதையை கேட்கவில்லை. அறம் படத்துக்கு பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக படம் இயக்கும் வாய்ப்பை எந்த நடிகரும் எனக்குத் தரவில்லை. யாரை வளர்த்து விடலாம் என்பதுதான் சினிமாவின் நோக்கமாக இருக்கிறது.
ஆனால் சினிமா கதாநாயகிகள் அப்படி அல்ல. ஆண்ட்ரியா, நயன்தாரா போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மீது அக்கறை உள்ளதால்தான், கதைகளை நம்பி படம் இயக்கும் என்னை போன்ற டைரக்டர் படங்களில் நடிக்க முன் வருகிறார்கள், என்று தன் கருத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் கோபி நயினார்.





