- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார், அருள்நிதி பட இயக்குனர் மீது துணை நடிகை புகார்!

என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார், அருள்நிதி பட இயக்குனர் மீது துணை நடிகை புகார்!

- Advertisement -

எரும சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் காமெடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் விஜயகுமார். ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு, நான் சிரித்தால் போன்ற படங்களில் காமெடி கேரக்டர்களில் எரும சாணி விஜயகுமார் நடித்துள்ளார். அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் சக யூடியூப் பிரபலம் நக்சத்ராவை திருமணம் செய்துக்கொண்டார். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிசார்ட் என்ற வெப் சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது துணை நடிகை அனுராகா நம்பியார் வீடியோ வெளியிட்டு புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை அனுராகா அதில் கூறியிருப்பதாவது, நான் ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்த ரிசார்ட் வெப் சீரிஸில் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக என்னை ஒரு ஆண்டுக்கு கால்ஷீட் ஒப்பந்தம் செய்தனர்.

- Advertisement -

ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்து என்னை முடக்கி விட்டனர். என்னை மோசடி செய்தார்கள். கடந்த 4 மாதமாக எந்த வேலையும் இல்லை. தயாரிப்பு தரப்பில் கேட்டால் ஷூட்டிங் இருக்கு. உங்களுக்கு பெரிய கேரக்டர் என்று சொன்னார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஹாட் ஸ்டாரில் இன்னொரு புராஜெக்ட்டில் நடிக்க அழைத்தனர். ஆனால் ரிசார்ட் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் என்னை அங்கு போக விடவில்லை.

இதில் எனக்கு பெரிய கேரக்டர் என்றனர். எனக்கு சம்பளம் கூட வரவில்லை. நான் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். எரும சாணி விஜயகுமார் தான் என்னை வெப் சீரிஸில் நடிக்க அணுகினார். அவர் நல்ல பிரபலம், நல்ல டீம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் 3 முறை ஆடிஷனுக்காக கேரளாவில் இருந்து வந்தேன். 90 சதவீதம் நீங்கள் தான் ஹீரோயின் கேரக்டர் என்றனர். நான் சம்பளம் வரவில்லை என்று கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர்.

- Advertisement -

நான் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டால் நிச்சயம் என்மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு வைக்கப்படும் என்று எனக்கு தெரியும். நான் யாரிடம் சென்று முறையிடுவது எனத் தெரியவில்லை. நடிப்புத் துறையில் இருப்பவர்களுக்கு ஏழெட்டு மாதங்கள் வேலையில்லாமல் இருப்பது ஒன்றும் சாதாரணம் கிடையாது. விஜயகுமாரின் மனைவி நக்சத்ராவும் என்னை அவதூறாக பேசுகிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னை இப்படி இழிவாக பேசுகிறார்.

நான் குறும்படத்தில் நடித்து போராடி தான் நடிக்க வாய்ப்பு பெற்றேன். எல்லா தப்பும் என் மேல் போடுறாங்க. நீங்க தானே நடிக்க வந்தீங்க? என்கிறார்கள். என்னோட சம்பளத்தை தானே கேட்டேன்? பல மாதங்களாக என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனை வேறு ஒருவருக்கு நடக்கக்கூடாது என்றுதான் வீடியோ வெளியிடுகிறேன். நான் மிகவும் உடைந்து போய் இருக்கிறேன் என்று நடிகை அனுராகா அந்த வீடியோவில் அழுதபடி கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்