- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம்; அதுதான் உண்மை, அறிக்கையை வெளியிட்டு பகிரங்கப்படுத்திய டைரக்டர்...

நடிகர் கமல்ஹாசனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம்; அதுதான் உண்மை, அறிக்கையை வெளியிட்டு பகிரங்கப்படுத்திய டைரக்டர் லிங்குசாமி – கோலிவுட்டில் பரபரப்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் டைரக்டர் லிங்குசாமி. இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

குறிப்பாக தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/19 கோலிசோடா, சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களை இவரது திருப்பதி பிரதர்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பல படங்கள் தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் பெற்று உள்ளன. இந்த படங்களில் பல படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி என்ற முறையில், திருப்பதி பிரதர்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆனதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், பொருளாதார பாதிப்பும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் நடிகர் கமல்ஹாசனும், அவரது அண்ணன் மறைந்த சந்திரஹாசன் இருவரும் மீண்டும் ஒரு படம் பண்ணி தருவதாக லிங்குசாமிக்கு உத்தரவாதம் அளித்து கடிதம் தந்துள்ளனர். இதையடுத்து நடிகர் கமலஹாசனை வைத்து, மீண்டும் படம் தயாரிக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி இருந்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே உத்தம வில்லன் படத்தால், எனக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று டைரக்டர் லிங்குசாமி கூறியதாக சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல் கூறியதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படி ஒரு தகவல் தெரிந்தால், லிங்குசாமிக்கு கமல்ஹாசன் மற்றொரு படம் பண்ணி தரவே மாட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பதி பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், டைரக்டர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொய்யான தகவல். நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படத்தை தயாரித்த எனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதுதான் உண்மை. இதற்கு ஈடாக கமல்ஹாசனும் அவர் அண்ணன் சந்திரஹாசனம் இதற்காக எனக்கு ஒரு படம் பண்ணி தருவதாக ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ளனர். பொய்யான தகவல்களை யாரும் நம்பாதீர்கள் என்று அந்த அறிக்கை வாயிலாக விளக்கம் தந்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்