- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளராக மாறிய ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத்… முதல் படத்தை இயக்கப் போகும் டைரக்டர்...

தயாரிப்பாளராக மாறிய ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத்… முதல் படத்தை இயக்கப் போகும் டைரக்டர் இவரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படம் மூலம் கடந்த 2014ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இந்த படத்தில் மோசடி பேர்வழிகள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள், பண மோசடி செய்கிறார்கள் என்ற சுவாரசியமான கதைக்களத்தில் சதுரங்க வேட்டை படத்தை எச் வினோத் உருவாக்கியிருந்தார்.

இதில் நட்டி நடராஜ் இஷாரா நாயர் இளவரசு பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் இந்த படத்தில் ஈமுகோழி மண்ணுளி பாம்பு ரைஸ் புல்லிங் பாதி விலைக்கு தங்கம் எம்எல்எம் என பல பெயர்களில் தமிழ்நாட்டில் நடந்த பல மோசடி சம்பவங்களை குறிப்பிட்டு எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார் இயக்குனர் எச். வினோத். இது பெரிய வரவேற்பை பெற்றது.

சதுரங்க வேட்டை படத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற அஜீத்குமார் நடித்த படத்தை எச் வினோத் இயக்கினார். அடுத்தடுத்து அஜீத்குமார் நடித்த வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று என்ற கார்த்தி நடித்த படத்தையும் இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணியில் இயக்குனராக மாறினார்.

இப்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதுதான் நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வரும் 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகை நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் எச் வினோத் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் ஏற்கனவே தயாரிப்பாளர்கள் ஆன நிலையில் இப்போது எச் வினோத்தும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் படம் உருவாக உள்ளது.

எச் வினோத் தயாரிக்கும் முதல் படத்தை மகளிர் மட்டும், குற்றம் கடிதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பிரம்மா இயக்க உள்ளார். இயக்குனர் பிரம்மா சமீபமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பிரம்மா இயக்கும் படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளர் எச் வினோத் எழுத உள்ளதாகவும் தகவல் கூறுகின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்