அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் கிட்டதட்ட இறுதி கட்டப் பணிகளை எட்டி இருக்கிறது. அனேகமாக வரும் டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் அஜித்துடன் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இதில் பிரேமலு பட கதாநாயகன் நடிப்பதாக தகவல் வெளியானது.
குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதன்பிறகு அஜித் குமார், அடுத்ததாகவும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
ஆறே மாதங்களில் இதன் சூட்டிங் பணிகள் முடிவடையும் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து அவர் கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாத் நீல் உடன் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் அஜித் பிஸியாக இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் அஜித் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை இயக்குனர் வினோத் பகிர்ந்து உள்ளார். அதில், அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் போதும், அவருக்கு தொடர்ந்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுப்பார் என்று தெரிவித்திருக்கிறார். இது உண்மை என்பதற்கு போலவே அஜித்தும் செயல்பட்டு வருகிறார்.
இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு மட்டும் அவர் நான்கு படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். விவேகம் திரைப்படத்தை தவிர, வீரம் வேதாளம் மற்றும் விசுவாசம் ஆகிய மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதே போல் வினோத்தும், நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை எடுத்தார். தற்போது இந்த பட்டியலில் ஆதிக் ரவிச்சந்திரனும் இடம் பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





