- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தியை முடித்த கையோடு சூட்டோடு சூட்டாக இந்த ஹீரோவுடன் இணைந்து புதிய பணியை தொடங்கும் சுதா...

பராசக்தியை முடித்த கையோடு சூட்டோடு சூட்டாக இந்த ஹீரோவுடன் இணைந்து புதிய பணியை தொடங்கும் சுதா கொங்கரா… இது என்ன புது தகவலா இருக்கு…

- Advertisement -

தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் பெண் இயக்குனர்கள் என்பது மிக மிகக் குறைவு தான். அதிலும் வெற்றி திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்த பெண் இயக்குனர் என எடுத்துக் கொண்டால் அவர் சுதா கொங்கரா மட்டும்தான். மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த அவர், துரோகி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் அந்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இதன்பிறகு பொறுமையாக காத்திருந்த சுதா, தனது இரண்டாவது திரைப்படமாக இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

காதல் விளையாட்டு பாசம் என அனைத்தும் ஒரு சேர எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற பலராலும் கவனிக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரானார் சுதா கொங்கரா. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை அவர் இயக்கினார்.

திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றது. மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது. இப்படி இரண்டு திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற சுதா கொங்கரா, அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ரவி மோகன் ஸ்ரீ லீலா அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது, அதன் டீசரை பார்க்கும்போதே உறுதியாக தெரிகிறது. டீசரின் தொடக்கத்தில் அச்சம் என்பது மடமையடா பாடல் வருவதும், இதன்பிறகு ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுகமும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

இப்படி முதல் பாலிலேயே சுதா கொங்கரா சிக்ஸர் அடித்து விட்டதாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அனேகமாக வரும் நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இப்படியாக, பராசக்தி திரைப்படத்தை முடித்த கையோடு அவர் அடுத்ததாக, துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பிரி ப்ரொடக்சன் பணிகள் கூட தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்