- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நான் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன், விஜய்கிட்ட அப்படி சொல்லி இருக்க கூடாது -...

அந்த விஷயத்தில் நான் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன், விஜய்கிட்ட அப்படி சொல்லி இருக்க கூடாது – இப்போது புலம்பும் பிரபல டைரக்டர்

- Advertisement -

நடிகர் விஜய் போன்ற டாப் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அரிய வாய்ப்பு. ஏனெனில் விஜய் மீதான அபிமானத்தாலும், அவர் மீது கொண்ட அன்பினாலும் அவர் நடித்த படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அப்படிப்பட்ட அவரை வைத்து ஹிட் படம் கொடுத்தால், டைரக்டர் லெவல் எங்கேயோ போய்விடும்.

அப்படிதான் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத்குமார் படங்களை இயக்கும் டைரக்டர்கள், நட்சத்திர இயக்குனர்களாக மாறி விடுகின்றனர். அதன்பிறகு அடுத்தடுத்த ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். சம்பளமும், புகழும் எதிர்பார்க்காத அளவுக்கு மாறி விடுகிறது.

நடிகர் விஜயை பொருத்த வரை பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களுக்கு பிறகு அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை படத்துக்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக விஜய் ஆடிய அதிரடி ஆட்டம் லியோ வரை தொடர்ந்து வருகிறது. கோட் படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் தரமான படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்ற ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் 1990களில் வலம் வந்தவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, இன்னொரு தேசிய கீதம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றன. 3 முறை சிறந்த படங்களை தந்த இயக்குனராக தேசிய விருது பெற்றவர் சேரன்.

ஆனால் சமூக அங்கீகாரத்தை பெற்ற படங்களை தந்த இயக்குனர் சேரன், கமர்ஷியல் இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டார். அப்போது நடிகர் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க ஆர்வம் காட்டினார். அதற்கான விஜயிடம் கதையும் சொன்னார். விஜய் ஓகே சொன்ன நிலையில், அந்த படத்தை சேரன் இயக்க முன்வரவில்லை.

இதுகுறித்து இயக்குனர் சேரன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஆட்டோகிராப் படத்துக்கு பின், விஜய் என்னிடம் கதை கேட்டார். நானும் சொன்னேன். அதன்பிறகு நான் தவமாய் தவமிருந்து படத்தை முடிக்க லேட் ஆனதால், இப்போதைக்கு படத்தை துவங்க முடியாது என்று விஜயிடம் சொல்லிவிட்டேன். விஜய் படத்தை அப்போது நான் மிஸ் செய்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவரை நான் இயக்கி இருந்தால், இன்று நான் வேறு ஒரு உயரத்தில் இருந்திருப்பேன், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்