விஜய் நடித்த ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அந்த நேர்காணலில் எச் வினோத் கூறியதாவது, பேஷன் ஸ்டுடியோ சுதன் நண்பர் சந்தோஷ் ஆகியோரிடம் நான் ஒருமுறை பேசிய போது விஜய் அவரோட கடைசி படத்துக்கு கதை கேக்குறாங்க என்று சொன்னார்கள். உடனே நான் விஜயின் மேனேஜரிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
அவரும் கதை இருக்குதா? என்றார். இருக்குது என்று நான் சொன்னதும் விஜயுடன் நேரில் சந்திப்பு நடந்தது. இப்படி தான் ஜனநாயகன் படம் உருவானது. விஜய்க்கு கதை ரொம்பவும் பிடித்திருந்தது. விஜயின் அரசியல் வருகையை மனதில் வைத்து கதையில் சில விஷயங்களை சேர்த்து இருக்கிறேன். தயாரிப்பாளர் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வாரா என்கிற தயக்கமும் இருந்தது.
தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி முடித்துவிடு என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறேன் என்பதையும் சொன்னேன். அவரும் நிறைய இன்ஃபுட் கொடுத்தார். சில அரசியல் இன்ஃபுட்டும் கொடுத்தார். அப்படி ஒரு தைரியமான தயாரிப்பாளர். ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்ற அறிவித்த பிறகுதான் படப்பிடிப்புக்கு புறப்பட்டோம். ஆனால் அவருக்கு இது கடைசி படம் என்ற அழுத்தமே இல்லை.
மொத்த படப்பிடிப்பு 100 நாட்கள் தாண்டி இருந்தாலும் அவரை மட்டுமே 84 நாட்கள் ஷூட் செய்திருக்கிறேன். அப்போது எனக்கு 84 விஜய் நடித்த படங்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவர் ஒரு கம்பளீட் ஸ்டார் ஆக்டர். தவிர அவர் ஒரு பக்கா டைரக்டர். அவருக்கு லைட்டிங் லென்ஸிங் ஷாட் தொடர்ச்சி என ஒரு இயக்குனருக்கு தெரிய வேண்டியதை விட அதிகமாகவே தெரிந்திருக்கிறது. அவர் கேமரா முன்னாடி நின்ற ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன.
நாம் ஒரு சீன் எழுதி அவருக்கு கொடுத்திருப்போம். அதில் அவர் என்ன மாதிரியான பெர்ஃபாமன்ஸ் பண்ண போகிறார் என பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம். அதனால்தான் அவர் நடித்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படம் பார்த்தது மாதிரி இருந்தது என்று சொன்னேன். நாம் நேரில் பார்க்கும் விஜய் வேறு. தனிப்பட்ட ரீதியில் பழகும் விஜய் வேறு. கேமரா முன்னாடி வந்து விட்டால் அவர் இன்னும் வேறு அவதாரம் எடுப்பார். ஒரு ஸ்டாரை செயற்கைத் தனம் இல்லாத ஒரு ஆராவை அவரிடம் உணர முடியும்.
இந்த கதை பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா, அதிலிருந்து சில காட்சிகளை எடுத்து ரீமேக் செய்து இருக்கிறார்களா அல்லது அதில் உள்ள ஒரு காட்சியை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பார்களா? இப்படி எதுவாக வேண்டுமானாலும் சந்தேகங்கள் இருக்கட்டும். இதைப் பற்றி படம் பார்க்க வருபவர்கள் கவலைப்பட வேண்டாம் என நினைக்கிறேன். நீங்கள் ஒரு ஷோ மட்டும் பார்த்திருங்கள். அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிந்துவிடும் என்று எச் வினோத் நேர்காணலில் கூறியிருக்கிறார்.





