சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஒரு நடிகர் வளர்ந்து வந்தாலே அவர்களுக்கான செல்வாக்கும் பணபலமும் எகிறிவிடுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கும் விதிவிலக்கு இல்லை என்பது போல் தெரிகிறது.

சிவகார்த்திகேயனை குறித்து இதுவரை நெகட்டிவாக பெரும்பாலும் யாரும் பேசியது கிடையாது. சினிமா துறையில் யாரை கேட்டாலும் மிகவும் பண்பானவர், மரியாதை தெரிந்தவர் என்றுதான் பலரும் கூறுவார்கள். ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
அதாவது திருப்பூருக்கு அருகே பல்லடம் என்ற ஊரில் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக ஒரு தார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சமீப நாட்களாக அந்த தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளிவருகிறதாம். இதனால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தற்போது அந்த தொழிற்சாலையை எதிர்த்து சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் நச்சு புகையால் ஒரு முதியவர் மூச்சு திணறி மரணம் அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியால் சினிமா துறையினர் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகாரும் அளித்துள்ளனராம்.

எப்போதும் அடுத்தவர் மீது அக்கறையோடு இருப்பதாக காட்டிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் இவ்வாறு சாமானியர்களின் உயிரோடு விளையாடுகிறாரே என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீப நாட்களாக இந்த செய்திதான் இணையத்தில் வைரல் செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. விரைவில் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.





