- Advertisement -
Homeபொழுதுபோக்குகிராமங்களின் நிலமை மோசமாக உள்ளது, அதனால்தான் அந்த கேரக்டரில் நடித்தேன் - ஆண்டவன் படம் குறித்து...

கிராமங்களின் நிலமை மோசமாக உள்ளது, அதனால்தான் அந்த கேரக்டரில் நடித்தேன் – ஆண்டவன் படம் குறித்து நடிகர் கே பாக்யராஜ் தந்த விளக்கம்!

- Advertisement -

இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் கே பாக்யராஜ். கடந்த 1980 90களில் கே பாக்யராஜ் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். திருவிழா போல தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் ஆரவாரமாக இருக்கும். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். அவரே அவரது இயக்கத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

இப்போது இயக்குனர் வில்லி திருக்கண்ணன் என்பவர் இயக்கத்தில் மகேஷ் வைஷ்ணவி நடிக்கும் ஆண்டவன் என்ற படத்தில் நடிகர் கே பாக்யராஜ் நடித்திருக்கிறார். சின்ன பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் அவர் கலெக்டராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஆண்டவன் படத்தில் கலெக்டர் கேரக்டரில் நடித்தது குறித்து நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, தமிழகத்தில் ஆள் இல்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது. கிராமங்களை காப்பாற்றுங்கள் என்ற கருவின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இது சமுதாயத்துக்கு மிகவும் அவசியமாக ஒரு படமாகும்.

இன்றைக்கு கிராமங்களில் நிலவும் பிரச்னைகள், மக்கள் நகரத்துக்கு வெளியிடங்களுக்கு ஏன் செல்கிறார்கள், கிராமங்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை இந்த படம் விவரிக்கிறது. இதுபோன்ற பல கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை வீடியோவாக எடுத்து சமூக அக்கறையுடன் இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

- Advertisement -

ஒரு கிராமத்தில் பலரும் சென்று விடுகின்றனர். ஒரு வைத்தியர் மட்டுமே அங்கே இருக்கிறார். தன்னை நாடி வருபவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார். அவருக்கு வீடு கொடுக்கும் அவரை பாராட்டும் கலெக்டராக நான் அந்த படத்தில் நடித்திருக்கிறேன். நான் அந்த சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று நிலமையை பார்த்தேன். அங்குள்ள வீடுகளில் நிலமை பரிதாபமாக இருந்தது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் பல ஊர்களில் நகரங்களில் நாடுகளில் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். அங்கே வேலைவாய்ப்பு இல்லாததால் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். சூழ்நிலைகளால் தங்கள் வாரிசுகளின் எதிர்காலம் கருதி சொந்த இடத்தை விட்டு பலர் செல்கிறார்கள். மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற மையக்கருவை இந்த படம் சொல்கிறது என்று இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்