- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேலுவுக்கு ஆண்மை குறைவு- வீட்டை சுற்றி போஸ்டர் ஒட்டிய பத்திரிக்கையாளர்கள், பிளேக்மெயில் ஜார்னலிஸத்தை புட்டு புட்டு...

வடிவேலுவுக்கு ஆண்மை குறைவு- வீட்டை சுற்றி போஸ்டர் ஒட்டிய பத்திரிக்கையாளர்கள், பிளேக்மெயில் ஜார்னலிஸத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்

- Advertisement -

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே புகழ், பணம், ஜாலியான வாழ்க்கை என்றுதான் பொதுமக்களின் நினைப்பாக இருக்கிறது. ஆனால் ஒரு நடிகர்/நடிகைக்கு எந்தளவு புகழ் கிடைக்கிறதோ அந்தளவுக்கு கேலிகளையும் கிண்டல்களையும் மிரட்டல்களையும் துரோகங்களையும் விமர்சனங்கலையும் எதிர்கொள்ள வேண்டும்.

இவற்றை மிக தைரியமாக எதிர்கொள்பவர்களே சினிமாத்துறையில் தொடர்ந்து ஜொலிக்க முடியும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், த்ரிஷா, நயன்தாரா, ஜோதிகா போன்ற பல டாப் நடிகர்/நடிகைகள் மீது பல விமர்சனங்களும் அவர்களை குறித்த அவதூறான செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

இந்த அவதூறுகளைக் கடந்துதான் அவர்கள் சினிமாவில் ஜெயித்திருப்பார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “ஓரு காலத்தில் திரிஷா குடித்துவிட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் டான்ஸ் ஆடியதாக செய்திகள் வந்ததே?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த செய்யாறு பாலு, “இந்த செய்தியை புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சமூக ஊடகங்கள் நிறைய வந்துவிட்டது. இப்போது யாரும் பொதுவெளிகளில் இப்படி நடந்துகொள்வது இல்லை. கேரவன் கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே மீடியாவை சந்திப்பதை பல நடிகர்கள் குறைத்துக்கொண்டார்கள்.

திரிஷா வளர்ந்து வந்த காலகட்டத்தில் இது போன்ற செய்திகளை சில பத்திரிக்கையாளர்கள் ஊடகத்திற்குச் சொல்வார்கள். ஆனால் சில ஊடகங்கள் அப்படி செய்திகளை வெளியிடமாட்டார்கள். அந்த காலகட்டத்தில் சில பத்திரிக்கைகள் இருந்தது. இது போன்ற செய்திகளை போஸ்டர் போட்டே அடிப்பார்கள். அந்த காலகட்டத்தில் பிளாக்மெயில் ஜார்னலிசம் என்று ஒன்று இருந்தது.

வடிவேலுவுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லி, வடிவேலுவின் வீட்டைச் சுற்றியே போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். காலை எழுந்ததும் வடிவேலுவுக்கே பக்குன்னு ஆகிவிட்டது. இந்த பிளாக்மெயில் ஜார்னலிஸத்தை ஊடக பட்டியலிலேயே சேர்த்துக்கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார்.

சற்று முன்