- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு நடிகர் ராம்சரணுடன் சங்கர் இணைந்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை இந்த தமிழ் இயக்குனர்...

தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் சங்கர் இணைந்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை இந்த தமிழ் இயக்குனர் உடையதுதானா… அப்படின்னா படத்துல ஒரு பெரிய விஷயம் ஒளிஞ்சிருக்கு போலயே…

- Advertisement -

பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போனவரான சங்கர், எந்திரன் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக எடையை குறைத்து, தன்னை உடல் ரீதியாக வருத்திக் கொண்டார் விக்ரம். படத்திற்காக அவர் மெனக்கெட்ட ஒவ்வொரு கெட்டப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

 

- Advertisement -

இப்படி மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ஐ திரைப்படம், ரசிகர்களை விமர்சன ரீதியாக ஏமாற்றியது. சங்கரிடமிருந்து இப்படி ஒரு சாதாரணமான பழிவாங்கல் கதையை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் குமுறினர். இந்த திரைப்படத்திற்குப் பிறகு 2.0 படத்தை இயக்கினார் ஷங்கர்.

 

- Advertisement -

பிரம்மாண்டத்திற்கும் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனாலும், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் வசூலில் சாதனை படைத்து, தயாரிப்பாளருக்கு ஆறுதலை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தான் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்தார் சங்கர்.

 

கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே இதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பணிகள் தடைப்பட்டது. பிறகு, சங்கருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டானது. படப்பிடிப்பிலும் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இப்படியாக தொடர்ந்து பிரச்சினைகள் என, அத்தனையும் முடிவதற்கு பல நாட்கள் தேவைப்பட்டது.

 

இந்த இடைவேளையில் தான் வேறொரு படத்தை இயக்கச் சென்றார் சங்கர். தெலுங்கு திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், ராம்சரணிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கினார். இதற்கான படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது பேட்ச் ஒர்க் பணிகள் இதில் செல்வதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கான கதையை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியிருக்கிறாராம். அவரிடம் இருந்து கதையை வாங்கி இருக்கும் சங்கர் தனக்கு தேவையான மாதிரி அதை மாற்றி இருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது. இதேபோல் ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகமும், வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளிவருகிறது.

 

- Advertisement -

சற்று முன்