- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த படத்தை இயக்க தயாரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் வரட்டும் என சுதாரித்த...

அடுத்த படத்தை இயக்க தயாரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் வரட்டும் என சுதாரித்த பிரபல நடிகர் – விஜய் படம் தந்த அனுபவமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா பேட்ட ஜிகர்தண்டா இறைவி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை தந்த அவர் இப்போது நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தின் பிரமோசன் பணிகள் இப்போது வேகமாக நடந்து வரும் நிலையில் இதற்கிடையே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். ஏனெனில் இப்போதைய சூழலில் எல்லா நடிகர்களுமே பிஸியாக படப்பிடிப்பில் இருந்து வருகின்றனர். அடுத்தடுத்த படங்கள் வரிசையாக அவர்களுக்கு இருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து முடிந்த நிலையில் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சிவகார்த்திகேயன் 20 நாட்கள் வரை நடிக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்க கார்த்திக் சுப்பராஜ் திட்டமிட்ட நிலையில் சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் ஒரு வரி கதையை சொன்ன நிலையில் அந்தக் கதை பிடித்திருப்பதாக சிவகார்த்தியேகன் உறுதியளித்திருக்கிறார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர், கால்ஷீட் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

- Advertisement -

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அந்த சந்தோஷத்தில் தி கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனை விஜயுடன் கேமியோ ரோலில் நடிக்க வைத்திருந்தார். அதுவும் துப்பாக்கியை பிடிங்க சிவா என விஜய் பேசிய டயலாக், தமிழ் சினிமாவில் இனி அடுத்த விஜய் எஸ்கே தான் என்ற பரபரப்பையே ஏற்படுத்தி விட்டது.

ஆனால் தி கோட் படம் சரியாக போகாத நிலையில் விமர்சன ரீதியாக பல எதிர்மறை கருத்துகளை சந்தித்ததால் வெங்கட்பிரபுவை காத்திருப்போர் பட்டியலில் எஸ்கே வைத்து விட்டார். அதே போல் இப்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன், உடனே ஓகே சொல்லாமல் அவர் இயக்கிய ரெட்ரோ படம் வெளியாகட்டும். படத்துக்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து, அவருடன் இணைவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என சுதாரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்