- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படம் பற்றி விமர்சித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மனச்சாட்சியே இல்லாம இப்படி பேசிட்டாரே?...

இந்தியன் 2 படம் பற்றி விமர்சித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மனச்சாட்சியே இல்லாம இப்படி பேசிட்டாரே? – நாயன்மாரே…!

- Advertisement -

ஒரு நல்ல படம், சிறந்த படம் தனக்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும். திறமையானவர்கள் எங்கு எப்படி இருந்தாலும் அவர்களது திறமையால், ஒருநாள் உலகம் போற்றும் ஒரு உன்னத நிலைக்கு வருவது போல், ஒரு படைப்பு சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், அதற்கு விளம்பரங்களோ, துதி பாடலோ தேவையே இல்லை.

இதை தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை உதாரணமாக சொல்லலாம். அறிமுக இயக்குனர், அறிமுக நடிகர், நடிகையர், அறிமுக இசையமைப்பாளர், அறிமுக தயாரிப்பாளர் என உருவான படங்கள் கூட சிறந்த படங்களாக இருந்து பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கின்றன. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

உதாரணமாக காக்கா முட்டை, குட்நைட், அறம், மண்டேலா, சித்தா, காதல், சமீபத்தில் வெளியான மகாராஜா, மலையாளத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு என ஏகப்பட்ட படங்கள் இப்படி பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதில் ரசிகர்களை மிகவும் கவருவது, கதை மற்றும் திரைக்கதைதான். இதற்கு மாயாஜாலம் தேவையில்லை.

ஆனால் லைகா புரடக்சன்ஸ் என்ற மிகப்பெரிய கார்பரேட் தயாரிப்பு நிறுவனம், கமல் என்னும் மகா கலைஞன், ஷங்கர் என்னும் பிரமாண்ட இயக்குனர், அனிருத் இசை என பெரிய பில்டப்பு செய்த இந்தியன் 2 படம், இவ்வளவு மோசமான விமர்சனத்தை சந்திக்கும் என்று ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படம் இப்போதும் சீன் பை சீன் ரசிக்கும்படி இருக்கும்படி இருக்கிறது. கமல் நடிப்பும், ஏஆர் ரகுமானின் இசையும், ஷங்கரின் இயக்கமும் அடேங்கப்பா என, மிகப்பெரிய வியப்பைத் தருகிறது. ஆனால் அதே ஷங்கர், அதே கமல் இணைந்து இப்படி இந்தியன் 2 என்ற பெயரில் ஒரு குப்பை படத்தை தருவார்களா, என்ற அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், இந்தியன் 2 படம் சூப்பராக உள்ளது. தான் நினைத்ததை திரையில் கொண்டு வர, ஷங்கரை போல உயிரைக் கொடுத்து வேலை செய்ய முடியாது என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கமல், எஸ்ஜே சூர்யா இருவரது நடிப்பும் பிரமிப்பாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். இப்படி மனச்சாட்சியே இல்லாமல், இந்த படத்தை சூப்பர் என்று சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்