- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவை நல்ல நடிகராக நினைத்தேன்… படப்பிடிப்பில் தான் அந்த விஷயம் தெரிந்தது - ரெட்ரோ பட...

சூர்யாவை நல்ல நடிகராக நினைத்தேன்… படப்பிடிப்பில் தான் அந்த விஷயம் தெரிந்தது – ரெட்ரோ பட விழாவில் ஓபனாக பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ். அவரது இயக்கத்தில் வெளியான பீட்சா ஜிகர்தண்டா இறைவி பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் பெரிய வெற்றியடைந்த நிலையில் இப்போது ரெட்ரோ படத்தை அவர் இயக்கி உள்ளார். இதில் சூர்யா பூஜா ஹெக்டே நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார் நடிகர் சூர்யா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

இந்த விழாவில் ரெட்ரோ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது, தனிப்பட்ட முறையில் ரெட்ரோ எனக்கு ரொம்பவும் பிடித்த படம். கேங்ஸ்டர் படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் சினிமாவுக்கு வரவில்லை. கிரே சைடில் இருக்கிற விஷயங்கள் எழுத்து மூலமாக வெளிக்கொண்டு வருவது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். இதை என்னுடைய முதல் படமான பீட்சா படத்தில் இருந்து நான் கையாண்டு வருகிறேன்.

என்னுடைய இயக்கத்தில் உருவான இறைவி படத்தில் பெண்கள் குறித்தும் காதல் குறித்தும் சொல்லி இருந்தேன். பெண்கள் எப்போதும் ஏன் தங்கள் சுதந்திரத்தை ஒரு ஆணிடம் தேடுகிறார்கள் என்கிற கேள்வி என்னுடைய மனதில் சிறுவயதிலிருந்தே இருந்தது. அதைச் சொன்ன திரைப்படம் தான் இறைவி.

- Advertisement -

இப்போது காதலை சொல்லும் படம்தான் ரெட்ரோ. ஆக்சன் காதல் கலந்த திரைப்படமாக இந்த படத்தை நான் எடுத்திருக்கேன். இந்த படத்தின் கதையை பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நான் எழுதி விட்டேன். படம் குறித்து நான் பேச வேண்டாம் என நினைக்கிறேன். இந்த படம் குறித்து நான் அதிகம் பேசப்போவதில்லை. நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.
இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்கும் போது உங்களுக்குள் எந்த தாக்கத்தை இந்த படம் தருகிறதோ, அப்படியே நீங்கள் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

சூர்யாவுடன் நான் இணையும் முதல் திரைப்படம் இதுதான். அவரை ஒரு நடிகராக மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால் அவர் இவ்வளவு ஜாலியான நபராக இருப்பார் என்று இப்போதுதான் எனக்கு தெரிந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு அனைவரிடமும் அரட்டை அடித்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். நிச்சயமாக இந்த படம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவ்விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்