- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களுடன் நீண்ட காலம் இருந்ததால் அவர்களது அருமை பெருமை புரியவில்லை, விரைவில் மக்கள் திருந்தி திரும்பி...

மக்களுடன் நீண்ட காலம் இருந்ததால் அவர்களது அருமை பெருமை புரியவில்லை, விரைவில் மக்கள் திருந்தி திரும்பி வருவார்கள் – இயக்குனர் கரு பழனியப்பன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கரு பழனியப்பனிடம் பேசிய ஒரு ரசிகர், தவெக கட்சியில் இளைஞர்கள் அதிகரிக்க காரணம், திமுக அதிமுக கட்சிகள் இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குனர் கரு பழனியப்பன், எஸ்பிபி மிகப்பெரிய ஆளுமைமிக்க பாடகர், மனோரமா மிகச்சிறந்த நடிகை. ஆனால் கடைசி காலத்தில் அவர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. வீட்டில் இருக்கும் நம் அம்மாவை கூட நாம் பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்து விட்டதால் அவரது மதிப்பை உணர தவறிவிடுகிறோம். பல ஆண்டு காலமாக மக்களுடன் இருந்த திமுக அதிமுகவையும் மக்கள் அப்படிதான் சாதாரணமாக நினைத்து விட்டார்கள். அவர்களது அருமை புரியவில்லை. விரைவில் காலம் மாறும். அதன் மதிப்பை உணர்ந்து மீண்டும் மக்கள் திமுக அதிமுக பக்கம் வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்