- Advertisement -
Homeபொழுதுபோக்குகோலி சோடா படத்தின் அடுத்த பாகமும் ரெடி... புதுப்புது நட்சத்திரங்களை புகுத்திய இயக்குனர் விஜய் மில்டன்......

கோலி சோடா படத்தின் அடுத்த பாகமும் ரெடி… புதுப்புது நட்சத்திரங்களை புகுத்திய இயக்குனர் விஜய் மில்டன்… ஆனால் ரிலீஸ் ஆவதில் இருக்கிறது ட்விஸ்ட்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஏராளமான படங்களில் பணிபுரிந்து இருக்கிறார் விஜய் மில்டன். காத்திருந்த காதல் என்ற திரைப்படம் தான் அவருக்கு இதில் அறிமுக படமாக அமைந்தது. அங்கிருந்து அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க 2004 ஆம் ஆண்டு விஜய் மில்டனுக்கு சிறப்பான வருடமாக அமைந்தது என்றே கூறலாம்.

 

- Advertisement -

தேசிய விருது பெற்ற சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் மற்றும் பரத்தின் காதல் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் பணியாற்றி புகழ்பெற்றார். இந்த இரண்டு திரைப்படங்களும் விஜய் மில்டனை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல, இயக்குனராகவும் அறிமுகம் ஆகினார்.

 

- Advertisement -

பரத்தின் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற திரைப்படம் தான் அவருக்கு இயக்கத்தின் முதல் திரைப்படம் ஆக அமைந்தது. ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. தொடர்ந்து தீபாவளி, காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18 கீழ் 9 ஆகிய திரைப்படங்களுக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

 

 

இப்படியான சூழலில் 2014 ஆம் ஆண்டு அவர் இயக்கிய கோலி சோடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக வைத்து அவர் எடுத்த இந்த திரைப்படம், ஒரு ஆக்சன் படமாக உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பெற்றோர் ஆதரவின்றி கோயம்பேடு மார்க்கெட்டில் வளரும் சிறுவர்களை சுற்றியே இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

 

எதற்கும் பயப்படாத நான்கு சிறுவர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெண், சிறுவர்களை கொல்ல துடிக்கும் வில்லன் கும்பல் என விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி வியப்படைய வைத்திருப்பார் விஜய் மில்டன். இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் தோல்வியடைந்தது. கடுகு மற்றும் கோலி சோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் சுமாரான விமர்சனத்தையே பெற்றன.

 

சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் படமும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தான் தற்போது கோலி சோடா படத்தின் மூன்றாம் பாகமாக கோலிசோடா ரைசிங்கை விஜய் மில்டன் உருவாக்கி இருக்கிறார். இது திரைப்படமாக இல்லாமல் சீரியஸாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்தவர்களுடன், ஷியாம், சேரன், ரம்யா நம்பீசன், புகழ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஹாட் ஸ்டார் ஓ டி டி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது

- Advertisement -

சற்று முன்