- Advertisement -
Homeபொழுதுபோக்குபடையப்பா 2 படம் இயக்குவது குறித்து ரஜினியுடன் கலந்து பேசினேன் - முக்கிய அப்டேட் தந்த...

படையப்பா 2 படம் இயக்குவது குறித்து ரஜினியுடன் கலந்து பேசினேன் – முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினிகாந்த் நடித்த படையப்பா முத்து போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். குறிப்பாக அவர் இயக்கிய சேரன் பாண்டியன் நாட்டாமை அவ்வை சண்முகி நட்புக்காக சமுத்திரம் போன்ற பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.

கேஎஸ் ரவிக்குமார் ஜனரஞ்சகமான படங்களை தந்தவர். அவர் இயக்கிய புத்தம் புது பயணம் என்ற படத்தில் அவரே வில்லனாக நடித்திருப்பார். மேலும் அவர் இயக்கிய படங்களில் அவர் கேமியோ ரோலிலும் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார். இப்போது பல ஆண்டுகளாக அப்பா அண்ணன் டாக்டர் போலீஸ் போன்ற கேரக்டர்களில் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நான் பல வெற்றிப் படங்களை இயக்கி விட்டேன். இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பது சுகமாக இருக்கிறது. டென்ஷன் இல்லை. நிறைய நேரம் கிடைக்கிறது. அப்போது படத்தில் நடிப்பவர்கள் என்னுடைய பட அனுபவங்களை கேட்கிறார்கள். அவர்களுக்கு நிறைய சொல்கிறேன்.

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவர் நடித்த ஆண்ட்ராய்டு குட்டப்பன் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தேன். அவருடன் கர படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை பார்க்கலாம் என நினைத்தபோது அவரை என்னிடம் வந்து என் படங்களைப் பற்றி பேசி சந்தோஷமாக என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

அவ்வப்போது ரஜினி சாருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். படையப்பா 2 எடுக்கலாம் என விவாதித்தோம். ஆனால் படையப்பாவை இந்த கதை மிஞ்சுமா என சந்தேகம் வந்ததால் அமைதியாகி விட்டோம். அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரும் பிஸி என்பதால் நானும் நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். படையப்பா என்ற தலைப்பை முதலில் ரஜினி சார் சொன்னபோது இது என்ன தலைப்பு என்றேன்.

ஆறு படையப்பன் என்பதின் சுருக்கம். இந்த தலைப்பு மக்களிடம் போய் சேரும் என்றார். அது நடந்தது. நான் இயக்கிய படங்கள் அதிகம். அதில் வெற்றி விகிதமும் அதிகம். இப்போது இயக்குனர்கள் குறைவான எண்ணிக்கையில் படம் இயக்குகிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழில் வெற்றி விகிதம் மாறவில்லை. முன்பு குறைவான படங்கள் வந்தது. இப்போது 200 250 படங்கள் வருவதால் தோல்வி அதிகமாக தெரிகிறது என்று கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.

- Advertisement -

சற்று முன்