- Advertisement -
Homeபொழுதுபோக்குவிசாரணை படத்துல யாருக்குமே சம்பளம் இல்லே… ஏன் தெரியுமா? - நீண்ட நாட்களுக்கு பின் சீக்ரெட்டை...

விசாரணை படத்துல யாருக்குமே சம்பளம் இல்லே… ஏன் தெரியுமா? – நீண்ட நாட்களுக்கு பின் சீக்ரெட்டை போட்டு உடைத்த இயக்குனர் வெற்றிமாறன்!

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்போது சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கிய 7 படங்களில் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை என 4 படங்களில் தனுஷ்தான் கதாநாயகன். அதனால் வெற்றிமாறன், தனுஷ் இடையே மிகவும் நெருக்கமான நட்பு நீடிக்கிறது. தயாரிப்பாளராக உள்ள நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக திட்டமிட்ட இந்த படம் மொத்தம் 3.5 கோடி வரை பட்ஜெட் எகிறியுள்ளது.

- Advertisement -

அதே நேரத்தில் இந்த படத்தின் மொத்த வசூலும் 3.85 கோடி ரூபாய்தான் ஆகியிருக்கிறது. ஆனால் விசாரணை படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. இந்த படத்துக்கு விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு வேற லெவலில் இருந்தது. தினேஷ் மட்டும் நடிக்கவில்லை என்றால், விசாரணை படம் உருவாக வாய்ப்பே இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் அவர் இயக்கிய விசாரணை படம் குறித்து கூறியதாவது, ஆடுகளம் படத்துக்கு பின் விசாரணை படத்தை இயக்க திட்டமிட்டேன். இந்த படத்தின் ஒன்லைன் கதையை சொன்னவுடன் நடிகர் தனுஷ் இந்த படத்தை அவரே சொந்தமாக தயாரிக்க ஓகே சொல்லி விட்டார்.

- Advertisement -

படத்தின் முழு கதையை அவர் கேட்கவே இல்லை. படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு என்று கேட்டார். நான் கேட்டவுடன் அந்த தொகையை தரவும் அவர் சம்மதித்து விட்டார். அந்த தொகையை உடனடியாக கொடுத்தது மட்டுமின்றி படத்துக்கான பல விஷயங்களை அவரே எங்களுக்கு செய்து கொடுத்தார்.

ஆனால் அந்த படத்துக்கு செலவு செய்த பட்ஜெட்டை விட பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதனால் அந்த படத்தில் நடித்த தினேஷ் கிஷோர் எடிட்டர் கிஷோர் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் நான் உட்பட யாருமே சம்பளமே வாங்கவில்லை. எங்களுக்கு என யாருமே நாங்கள் சம்பளம் எடுத்துக்கொள்ளவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்