நடிகர் விஜய் இப்போது தி கோட் படத்தில் நடித்திருக்கிறார். இரட்டை வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படம் இன்னும் 2 தினங்களில் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் தி கோட் படம்தான் திரையிடப்படுகிறது என்பது இந்த படத்தின் சிறப்பம்சமாக உள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
இதற்கு முன்பு நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் லியோ. கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது. திரிஷா, அர்ஜூன், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும், விமர்சன ரீதியாக தோல்வி படமாகவும் இருந்தது.
இந்த படத்தை பொருத்த வரை படம் குறித்து வந்த தகறான தகவல்களும், படம் குறித்து செய்யப்பட்ட அதிகப்படியான பில்டப்புகளும் படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக எல்சியு விஷயங்கள் அதிகளவில் இந்த படத்தில் எதிர்பார்க்கப்பட்டதே இந்த படத்தில் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
அதுமட்டுமின்றி லியோ படத்தில் இரட்டைப் பிறவி, நரபலி, ஜாதக நம்பிக்கை என 2023ம் ஆண்டில் பேசுவதே வேடிக்கையாக போன விஷயங்களை விஜய் படத்தின் கதையில் முக்கிய விஷயங்களாக கொண்டு வந்தது கேலிக்குரியதாக மாறிவிட்டது. இதுவும் லியோ படத்தின் மிக மோசமான தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை கொடுத்து கமலுக்கு கம்பேக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் கமலின் கட்டளையை மறுக்க முடியாமல், சில மாதங்களுக்கு முன் அவரது மகள் ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் ரொமாண்டிக் ஆக நடித்தது வைரலானது. லோகி அண்ணா என்னண்ணா இதெல்லாம் என்று அவரது ரசிகர்களே தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றில், லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் இதற்கு முன்பே, அவர் இயக்கிய மாஸ்டர் படத்தில் கிளைமேக்ஸில் சிறைக்குள் இருக்கும் காட்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், தனது நண்பர் ரத்தனக்குமாருடன் கைதியாக நடித்திருக்கிறார். அவரை நடிகர் அர்ஜூன்தாஸ் எச்சரிப்பது போன்ற ஒரு காட்சியில் லோகேஷ் கனகராஜ் பீடி புகைத்தபடி சில வினாடிகள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





