- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட்டை கொடுத்த அர்ஜுன்... என்னா மனுஷன்யா என பாராட்டும் ரசிகர்கள்...

விடாமுயற்சி திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட்டை கொடுத்த அர்ஜுன்… என்னா மனுஷன்யா என பாராட்டும் ரசிகர்கள்…

- Advertisement -

வலிமை திரைப்படத்தைப் போல தான் தற்போது விடாமுயற்சிக்கும் ஆகிவிட்டது என அஜித் ரசிகர்கள் சமீப காலமாக இணையதளத்தில் புலம்பித் தள்ளுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்திலிருந்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பதுதான்.

 

- Advertisement -

விடாமுயற்சி குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு சூட்டிங் தொடங்கவே இல்லை. படத்திற்கான வேலைகளில் மகிழ் திருமேனி கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அஜித்குமாரோ தனது பைக்கை எடுத்து ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டார்.

 

- Advertisement -

இதனால் ரசிகர்கள் குழம்பி போயினர். சூட்டிங் தொடங்காமல் ஐந்து மாதங்கள் ஆன நிலையில், விடாமுயற்சி வீண் முயற்சி ஆனதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான், அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

 

பிறகு படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரும் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுவும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலமாகவே ரசிகர்களுக்கு தெரிந்ததே தவிர, தயாரிப்பு நிறுவனம் இது குறித்து வாய் திறக்கவில்லை. சரி படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஆறு மாதமாக நடந்து வரும் நிலையில் அது குறித்தும் தயாரிப்பு நிறுவனம் எதுவும் கூறும் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை.

 

இதனால் சலிப்படைந்த ரசிகர்கள், எப்போதுதான் அப்டேட் வரும் என்று கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க, படப்பிடிப்பின் போது நடந்த விபத்து காட்சியை இணையத்தில் வெளியிட்டார் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. இதைப் பார்த்துவிட்டு பதறிப் போன அஜித் ரசிகர்கள், இனிமேல் அப்டேட்டே கேட்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்படியான சூழலில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்கு பதிலாக, தனது அடுத்த திரைப்படம் ஆன குட் பேட் அக்லியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அஜித்குமார்.

 

இதனால் விடா முயற்சி என்ன ஆனது என்று ரசிகர்கள் குழம்பி போயினர். படம் வருமா வராதா என்ற கேள்வியும் திரைத்துறை வட்டாரத்தில் எழும்ப ஆரம்பித்தது. இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளின் திருமணத்தின் போது செய்தியாளர் ஒருவர் விடாமுயற்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார் அர்ஜுன். அதில் இன்னும் படப்பிடிப்பு 20 முதல் 30 சதவீதம் மட்டும் தான் இருப்பதாகவும், விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், விடாமுயற்சி திரைப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்