- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளியில் என்னவெல்லாமோ கூறுகிறார்கள்... ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை... ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஓப்பனாக...

வெளியில் என்னவெல்லாமோ கூறுகிறார்கள்… ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை… ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஓப்பனாக பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது. ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். என்கவுண்டர் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் ட்ரைலரை பார்க்கும் போதே தெரிந்தது.

 

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் எந்த திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள துறைமுகத்தில் பிரம்மாண்ட செட் போட்டு முக்கிய காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.

 

- Advertisement -

இதில் ரஜினிகாந்துடன் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். மலையாள நடிகர் ஷோபின் சபீர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். படத்தில் நாகர்ஜூனா, சைமன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

 

அண்மையில் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில் வெள்ளை கோட் அணிந்தபடி, நாகர்ஜுனா ஒருவரை சுத்தியலால் அடித்துக் கொள்ளும் வகையில் காட்சி இடம் பெற்று இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், சென்னை திரும்பிய போது திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்கள் ஸ்டன்ட்-ஐ பொருத்தினர். இந்த நிலையில் மருத்துவமனையில் இரண்டு மூன்று நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

 

அவர் அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் படப்பிடிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார். தற்போது அவர் இல்லாத காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், 40 நாட்களுக்கு முன்பே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக ரஜினிகாந்த் எங்களிடம் கூறிவிட்டார். இதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்கூட்டியே நாங்கள் விசாகப்பட்டினத்தில் படமாக்கி விட்டோம். ஆனால் வெளியே என்ன என்னவெல்லாமோ கூறுகிறார்கள். அதில் எல்லாம் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்