- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை வெச்சே, இது ஆடியன்ஸ்க்கு பிடிச்ச படமா, இல்லையான்னு ரீலிஸ்க்கு முன்பே கண்டுபிடிச்சிடுவேன் -...

இதை வெச்சே, இது ஆடியன்ஸ்க்கு பிடிச்ச படமா, இல்லையான்னு ரீலிஸ்க்கு முன்பே கண்டுபிடிச்சிடுவேன் – லோகேஷ் கனகராஜின் சீக்ரெட் பார்மூலா

- Advertisement -

மாநகரம் படம்தான், இயக்குநராக லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல்படம். பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காத இந்த படத்தின் விறுவிறுப்பான கதை தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது. அடுத்தடுத்து என்ன என்ன என ஆர்வத்தை தூண்டும் விதமான திரைக்கதை அமைப்பு, படத்தை வேற லெவலில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அடுத்து மாஸ்டர், கைதி படங்களை தொடர்ந்து விக்ரம் படம், லோகேஷ் கனகராஜை, பார்த்து தமிழ் சினிமா உலகமே திகைத்தது. இப்படி ஒரு படத்தை இந்த இளம் இயக்குநர் தந்திருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு போனது. பவானி கேரக்டரில் விஜய் சேதுபதி, டிடெக்டிவ் ஏஜண்ட் ஆக பகத் பாசில், விக்ரம் கேரக்டரில் கமல் என மூன்று நடிப்பு சக்கரவர்த்திகளும் படத்தை, தரமான சம்பவமாக மாற்றி விட்டனர். கிளைமாக்ஸில் சில நிமிடங்களே வந்தாலும், ரோலக்ஸ் நடிப்பில் சூர்யா, மிரட்டி இருந்தார்.

- Advertisement -

இப்போது, விஜய் நடித்த லியோ எந்த அளவுக்கு உச்சம் தொடப் போகிறது என்பதையே தமிழ் சினிமா உலகம் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறது. நிச்சயமாக இது விஜய் படமாக இருக்க வாய்ப்பில்லை. வாரிசு, பீஸ்ட் தந்த ஏமாற்றங்களால் சுதாரித்துக்கொண்ட விஜய், இந்த படத்தை உங்கள் படமாக ரசிகர்களுக்கு கொடுங்கள் என, படம் துவங்கி அன்றே விஜய், லோகேஷிடம் தெளிவாக கூறி இருக்கிறார்.

நேரத்தை, பணத்தை செலவழித்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் திருப்தியே எனக்கு மிக முக்கியம். என்னை நம்பி படம் முதலீடு செய்த தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது. ஹீரோவிடம் சொன்ன மாதிரியே, படத்தை எடுக்க வேண்டும் ஆகியவை மட்டுமே எனது முக்கிய கடமைகள். இதில் நான் முழு வெற்றி பெற்றால் போதும். படத்தின் கலெக்‌ஷன் பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சமீபத்தில் மற்றொரு சீக்ரெட்டையும், நேர்காணல் ஒன்றில் உடைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ், அவர் கூறுகையில், இது லோகேஷ் கனகராஜ் படம் என்ற ரசிகர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு, ஆர்வம் குறித்த என் மீதான பிரஷரை நான் மிக எளிதாக கையாண்டு விடுவேன். ஏனெனில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான காட்சிகள் நிறைந்த படத்தை நான் எடுக்கிறேன். அவர்களுக்கு என்ன மாதிரியான விஷயங்கள் பிடிக்கும் என்பதை, கடந்த என் படங்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

நான் இயக்கிய படம், அது ரிலீஸாவதற்கு முன்பே அந்த படம் ஆடியன்ஸ்க்கு பிடிக்குமா, பிடிக்காதா என்பது எனக்கு முதலிலேயே தெரிந்து விடும். படத்தை எடிட் செய்யும் எடிட்டர் டீம், பின்னணி இசை தரும் இசைக்குழு, படத்தின் மத்த டெக்னீஷியன் படத்தை பார்க்கும்போதே, அவர்களது ரியாக்‌ஷனே படம் எப்படி என்பதை சொல்லி விடும். ரிலீஸ்க்கு முன்பே படத்தை பார்க்கும் டெக்‌னீஷியன்களும் ரசிகர்கள்தான். அவர்களுக்கு பிடித்தால், தியேட்டரில் ரசிகர்களுக்கும் படம் கண்டிப்பாக பலமடங்கு பிடிக்கும் என கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்