- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 படம் இதுவரை உலக அளவில் மொத்தம் 825 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வசூலை எந்த படமும் எட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 220 கோடி ரூபாய் வட இந்தியாவில் 60 கோடி ரூபாய் வெளிநாட்டில் 273 கோடி ரூபாய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 100 கோடி ரூபாய் கேரளாவில் 79 கோடி ரூபாய் கர்நாடகாவில் 93 கோடி ரூபாய் என மொத்தம் 825 கோடி ரூபாய் வசூலித்து ஜெயிலர் 2 படம் புதிய சாதனையை படைத்துள்ளது. படம் வெளியான 18 நாட்களில் இந்த அரிய சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





