தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இந்திய அளவில் ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு திரை படைப்பாளி. பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். மணிரத்னம் படங்கள் என்றாலே அது தனித்துவமான ஒரு மொழி பேசும் படங்களாக தான் இருந்து வருகின்றன.
கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பலத்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது. ஏனென்றால் கதையில் கல்கி எழுதிய முடிவை திரைக்கதைக்காக மணிரத்னம் மாற்றியது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதன்பிறகு கமல் சிம்பு திரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக்லைஃப் படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதிலும் திரிஷா நடித்த இந்திராணி கேரக்டர் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதனால் தக்லைஃப் படமும் மணிரத்னத்துக்கு பலத்த தோல்வியை தந்துவிட்டது.
இதையடுத்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிகை சாய்பல்லவி நடிக்கும் ஒரு படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை மணிரத்னம் கமிட் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.
மணிரத்னம் படம் என்றாலே அதில் ஏஆர் ரகுமான் இசை என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். ரோஜா படத்தில் ஏஆர் ரகுமானை அறிமுகம் செய்ததே மணிரத்னம்தான். அதுவரை மணிரத்னம் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்தார். ஒரு கட்டத்தில் மணிரத்னத்தை இளையராஜா அவமதித்த நிலையில் தான் ஏஆர் ரகுமானை தன் படத்தில் மணிரத்னம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் இப்போது ஏஆர் ரகுமானை நிராகரித்து விட்டு சாய் அபயங்கரை தனது புதிய படத்தில் இசையமைக்க மணிரத்னம் தேர்வு செய்திருப்பது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான், மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு இசையமைக்க சம்பளம் பேசியது இல்லை. அவர் கொடுக்கும் சம்பளத்தை தயங்காமல் சந்தோஷமாக பெற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த பண்பாளர் என்ற ஒரு முக்கிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.





