காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் மணிகண்டன். இந்த படம் வெகுஜன படைப்பாக பெரிய அளவில் கவனம் பெற்ற ஒரு படைப்பாக இருந்தது. அதன்பிறகு ஜியோ ஹாட் ஸ்டார் தரப்பில் ஒரு வெப் சீரிஸ் இயக்குமாறு மணிகண்டனுக்கு அழைப்பு விடப்பட்டது.
இயக்குனர் மணிகண்டன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் என்ற வெப் சீரிஸ் உருவானது. மதுரையில் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் இயக்கப்பட்டது. இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய நிலையில் மே மாதத்திலேயே இந்த சீரிஸில் இருந்து இயக்குனர் மணிகண்டன் வெளியேறி விட்டார்.
இதற்கு காரணம் இயக்குனர் மணிகண்டன் இந்த சீரிஸில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு இந்த படத்தில் எடிட்டராக இருந்த அஜீத்குமாரை வைத்து இந்த வெப் சீரிஸ் எடுத்து முடிக்கப்பட்டது.
வெகு விரைவில் இந்த முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான விழாவில் நாயகன் விஜய் சேதுபதி பிக்பாஸ் பார்வதி இயக்குனர் அஜீத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போதுதான் இந்த வெப் சீரிஸ் இயக்குனர் மணிகண்டன் இல்லை என்ற தகவலே பலருக்கும் தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி இந்த வெப் சீரிஸை ஆரம்பத்தில் தயாரித்தது இயக்குனர் காக்கா முட்டை மணிகண்டன்தான். ஆனால் இப்போது இந்த வெப் சீரிஸ் தயாரிப்பாளராக விஜய் சேதுபதி தான் இருக்கிறார். மேலும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இயக்குனர் மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அப்படி இயக்குனர் மாற்றப்பட்டாலும் தயாரிப்பையும் ஏன் மாற்ற வேண்டும்? அதுவும் விஜய் சேதுபதி ஏன் சொந்தமாக இந்த வெப் சீரிஸை தயாரிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இந்த விழாவில் இயக்குனர் மணிகண்டன் குறித்து யாருமே பேசாத நிலையில் விஜய் சேதுபதி செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம் என்றும் ஒரு விமர்சனம் வைரலாகி வருகிறது.





