தமிழ் சினிமாவில் சில படங்களை டைரக்ட் செய்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தரும்போது ரசிகர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர். பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் மற்றும் வாழை ஆகிய 4 படங்களை இயக்கிய நிலையில், அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் ( காளமாடன்) படம் வெளியாக உள்ளது.
வழக்கமாக மாரி செல்வராஜ் இயக்கும் படங்களில் சாதிய கொடுமை சமூக உரிமகைள் அதிகார வர்க்கம் துஷ்பிரயோகம்தான் பேசப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்தில் உருவான அவரது படங்கள் பெரிய விமர்சனங்களில் சிக்கினாலும் படங்கள் வெற்றி பெற்று விடுகின்றன.
குறிப்பாக மாமன்னன் படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வடிவேலு நடிப்பு இந்த படம் வேற லெவலில் இருந்தது. காமெடி நடிப்பில் வைகைப்புயல் என அழைக்கப்படும் அவர் குணச்சித்திர நடிப்பில் இந்த படத்தில் எம்எல்ஏ கேரக்டரில் வித்யாசமான நடிப்பை தந்திருக்கிறார். வடிவேலு இப்படியும் நடிப்பாரா என்ற ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார்.
நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நிலையில் அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பைசன் படம் வெளியாக உள்ளது. காளமாடன் என்ற புனைப்பெயருடன் வரும் பைசன் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுவும் மாரி செல்வராஜின் மற்றும் ஒரு சிறந்த படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், ஜப்பான் நாட்டுக்கு சென்று திரும்பியிருக்கிறார். ஜப்பானில் சில வாரங்கள் தங்கியிருந்த அவர் பல இடங்களுக்கு சென்று லோகேஷன் பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார். அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை தான் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ்தான் தயாரிக்க உள்ளார்.
தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஜப்பானில் படமாக்க இயக்குனர் மாரி செல்வராஜ் முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜப்பானில் லொகேஷன் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய அவர், நடிகர் தனுஷை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்காக எனக்கு 7 மாதங்கள் தேவைப்படும். அதுவரை வெயிட் பண்ணுங்க என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். தனுஷூம் ஓகே சொல்லிவிட்டார். இதையறிந்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ், ஸ்கிரிப்ட் எழுதவே 7 மாதமா, அப்போ படப்பிடிப்பு முடிவது எப்போ? என்று கதிகலங்கி போய்விட்டதாக கூறப்படுகிறது.





