- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி ஐந்து படை தான், முதலாம் படையை மறந்து விடு - தீப விவகாரத்தில் தமிழக...

இனி ஐந்து படை தான், முதலாம் படையை மறந்து விடு – தீப விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த திரௌபதி பட இயக்குனர் மோகன்ஜி!

- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது, தீப விவகாரத்தில் நீதிமன்றத்தில் வெற்றி கண்டாலும் மக்கள் மன்றத்தின் தோல்வி என்பதை தனி மனிதனாக நான் ஒத்துக் கொள்கிறேன். தமிழக அரசே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஆவணமாக வெளியிட்ட பிறகு சாமானியன் என்ன செய்ய முடியும்? இனி உனக்கு திருப்பரங்குன்றம் மலை இல்லை. சிக்கந்தர் மலையில் உள்ள முருகனை தரிசனம் செய்ய மனம் இருந்தால் தரிசித்து விட்டு வாருங்கள். இந்துவாக பிறந்த நான் இந்த தமிழ்நாட்டில் அடிமை என ஒத்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முன்னேறும் வழியை தேடுங்கள் இந்துக்களே. உனக்கு இனி ஐந்து படை தான். முதலாம் படையை மறந்துவிடு. நன்றி தமிழக முதல்வர் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்