- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் எந்த விதத்திலும் அவர்களை காயப்படுத்தாது… படத்தின் ஹீரோவுக்கு நான் சம்பளமே தரவில்லை -...

இந்த படம் எந்த விதத்திலும் அவர்களை காயப்படுத்தாது… படத்தின் ஹீரோவுக்கு நான் சம்பளமே தரவில்லை – திரௌபதி 2 படம் குறித்து பேசிய இயக்குனர் மோகன்ஜி!

- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. தொடர்ந்து அவர் இயக்கிய திரௌபதி 2 படம் நாளை மறுதினம் 15ம் தேதிக்கு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரௌபதி 2 படம் குறித்து இயக்குனர் மோகன்ஜி கூறியதாவது, இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட இன்னும் சம்பளம் வாங்கவில்லை. இந்த கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஹீரோவை மட்டும் மாற்ற மாட்டேன் என்றேன்.

- Advertisement -

திரௌபதி முதல் பாகம் பண்ணும் போது அதில் நடித்த கதாநாயகிக்கு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு என்னையே எதிர்த்து பேசக்கூடிய நிலைமை வந்தது. மோகன் ஜி படத்தில் ஏன் நடிக்கிறாய் என்று ஒரு சிலர் மிரட்டுவார்கள். அதனால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அதனால் இந்த படத்தின் ஹீரோயின் ரக்சனாவுக்கு கதை முழுவதும் சொல்லி நடிக்க வைத்தேன்.

காசிக்கு சென்றபோது அங்கே கோவிலுக்குள் நந்தி இருந்தது. ஆனால் எதிரே சிவன் சிலை இல்லை. ஞானவாபி மசூதி இருந்தது. படையெடுப்பு பற்றி கேள்விப்பட்டேன். வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்களால் கடும் பாதிப்பு என அறிந்தேன். அப்போது இந்த படத்தின் கரு கிடைத்தது. தோலை உரித்து தொங்க விடுவேன் என்கிற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

திருவண்ணாமலை பின்னணியில் ஆண்ட வீர வல்லாள மகாராஜா என்பவர் அப்படி ஒரு தண்டனைக்கு உள்ளானார். அதனை இந்த படத்தில் பார்ப்பீர்கள். இந்த நாட்டில் ஒரு கடவுளை மட்டுமே வழிபட முடியாது. எல்லா தெய்வங்களையும் மதிக்க வேண்டும். இந்த படத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்ல என்ற வசனம் வருகிறது. நிச்சயமாக பிரச்னை வராது என்று நினைக்கிறேன். இந்தியில் சாவா படம் நல்ல வசூல் செய்தது. அதுதான் எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்தது.

வரலாறு குறித்த ஆதாரம் இருந்தால் நிச்சயமாக எந்த படமும் பண்ணுவேன். எம்கோனே பாடலை ஒருவரை பாட வைத்து ஒரு தவறு செய்தேன். அதற்கு பதிலாக தான் பத்மலதாவை பாட வைத்தேன். இந்த படம் இந்திய முஸ்லிம்களை எந்த வகையிலும் காயப்படுத்தாது. இந்த படத்தில் வரும் துருக்கி நாட்டவர்களை பார்க்கும்போது துருக்கியில் இருந்து வந்த மனிதர்களாய் மட்டுமே பார்க்க வேண்டும் என்று இயக்குனர் மோகன்ஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்