- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த சச்சின் படத்தில் ஹீரோயினுக்கு பின்னணி பேசியது அஜீத் பட நடிகையா? - 3...

விஜய் நடித்த சச்சின் படத்தில் ஹீரோயினுக்கு பின்னணி பேசியது அஜீத் பட நடிகையா? – 3 நாட்களில் சச்சின் வசூலித்தது இத்தனை கோடிகளா?

- Advertisement -

விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் பெரும்பாலும் அவர் நடித்த படங்கள் காதல் கதைகளாக தான் இருந்தன. இளம் வயது ஹீரோக்கள் நடிக்க வந்தால் முதலில் அவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வரவேற்பை பெற்றுத் தருவது காதல் படங்கள்தான். அப்படிதான் நடிகர் விஜய்க்கும் ஆரம்பத்தில் பல படங்கள் இருந்தன.

இதில் பூவே உனக்காக துள்ளாத மனமும் துள்ளும் காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு நினைத்தேன் வந்தாய் லவ் டுடே போன்ற படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தன. திருமலை திருப்பாச்சி சிவகாசி போன்ற படங்களுக்கு பிறகுதான் விஜய் முழுநேர ஆக்சன் ஹீரோவாக மாறினார்.

- Advertisement -

கடந்த 2005ம் ஆண்டில் விஜய் நடித்த படம் சச்சின். முழுக்க முழுக்க காதல் கதையில் உருவான இந்த படத்தில் ஜெனிலியா நாயகியாக நடித்திருந்தார். ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரகுவரன் வடிவேலு தாடி பாலாஜி சந்தானம் என பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் விஜய் மிகவும் ஸ்மார்ட் ஆக இருப்பார்.

சச்சின் படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த 18ம் தேதி இந்த படம் தமிழ்நாடு முழுவதும் 230 திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளில் 1.9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் கடந்த 3 நாட்களில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் தூள் கிளப்பியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சச்சின் படத்தில் ஜெனிலியா விஜய்க்கு ஜோடியாக ஷாலினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகை கனிகா என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இவர் வரலாறு படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் இப்போது டிவி சீரியலிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் படத்தில் விஜய் ஜெனிலியா காதல் காட்சிகளில் இருவரும் பேசிக்கொள்ளும் பல காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்த படத்தின் பெரிய பலமே அதுதான். அப்படிப்பட்ட காட்சிகளில் ஜெனிலியா போலவே ரியாக்சன் காட்டி நடித்து டப்பிங் பேசியிருந்தார் நடிகை கனிகா என்ற தகவலை படத்தின் இயக்குனர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்