- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்தின் படத்தை பார்த்து மயங்கி விழுந்த சாமியார், பதறியடித்து ஓடிய சூப்பர் ஸ்டார், எதுக்கு இதுலாம்?

ரஜினிகாந்தின் படத்தை பார்த்து மயங்கி விழுந்த சாமியார், பதறியடித்து ஓடிய சூப்பர் ஸ்டார், எதுக்கு இதுலாம்?

- Advertisement -

ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.500 கோடிகளை நெருங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படத்தின் வசூலை முறியடித்திருக்கும் “ஜெயிலர்” திரைப்படம் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் வசூலை விரைவில் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது நிரூபணமாகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல் ரஜினி ரசிகர்கள் அல்லாத சாதாரண சினிமா ரசிகர்கள் கூட “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“ஜெயிலர்” திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இமயமலைக்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த். அதன் பின் உத்தர பிரதேச மாநிலத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், அம்மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.

ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் ரஜினி ரசிகர்கள் அவர்களால் முடிந்தளவு பதிலளித்து வருகின்றனர். “யோகி ஆதித்யநாத் ஒரு யோகி. ஆதலால்தான் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்தார்” என்று கூறி வருகின்றனர். எனினும் சில ரஜினி ரசிகர்களுக்கே ரஜினிகாந்த் செய்த காரியத்தை ஜீரணிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்பது பல ரசிகர்கள் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பாபா” திரைப்படம் வெளியானபோது ரஜினிகாந்த் வட நாட்டில் இருந்து ஒரு சாமியாரை அழைத்து வந்து அவருக்கு “பாபா” படத்தை போட்டுக்காட்டினாராம். படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த சாமியார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாராம். பதறிப்போன ரஜினிகாந்த் அந்த சாமியாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தாராம். அதன் பின் அந்த சாமியார் உடல்நலம் தேறிய பிறகு அவரை பத்திரமாக வட நாட்டுக்கு அனுப்பிவைத்தாராம்.

சற்று முன்