- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிரபல திரைப்பட இயக்குனர் - அட சீமான் மேல...

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிரபல திரைப்பட இயக்குனர் – அட சீமான் மேல இப்படி ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை சொல்லியிருக்காரே?

- Advertisement -

ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சீமான். பிறகு அவர் பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார். பிறகு மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். இதற்கிடையே நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கத்தையும் அவர் உருவாக்கினார்.

கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகர் சீமான் தொடர்ந்து தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடும் அவரது கட்சி சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

- Advertisement -

நாம் தமிழர் கட்சியில் இருந்த திரைப்பட இயக்குனர் மு களஞ்சியம் அந்த கட்சியில் இருந்து சமீபத்தில் விலகியிருக்கிறார். 1996ம் ஆண்டில் வெளியான பூமணி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கிழக்கும் மேற்கும் மிட்டாமிராசு நிலவே முகம் காட்டு பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் முந்திரிக்காடு என்ற படம் வெளியானது.

நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்த இயக்குனர் மு களஞ்சியம், சில தேர்தல்களிலும் நாதக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மு களஞ்சியம், சீமான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் மு களஞ்சியம் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, தேர்தலில் வெற்றி பெறுவது நாதக கட்சியின் நோக்கம் அல்ல என்பதை 2026 தேர்தலில் நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். எந்த கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற கணக்குகளோடு அதற்கேற்ற வகையில் வேட்பாளர்களை சம்பந்தமே இல்லாமல் தொகுதிகளில் நிறுத்துவார்கள்.

இதன் பின்னணியில் பெரிய லாபம் நட்டம் கணக்கு இருக்கிறது. ஆக தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமானின் தனிப்பட்ட சுயலாப அரசியலுக்கு நான் பலியாக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்று நா த க கட்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை இயக்குனர் மு களஞ்சியம் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்