தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் சில இயக்குனர்கள் மேடைகளில் பேசும்போது எதையாவது வில்லங்கமாக பேசி விடுவது வழக்கம். அவர்கள் ஜாலியாக காமெடியாக சொல்லும் சில விஷயங்கள் பிறகு பெரிய விவகாரங்களாக மாறி இணையத்தில் அனல் பறக்க செய்துவிடுகிறது. அப்படி அடிக்கடி தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது.
இதுபோல் வில்லங்கமாக பேசி அடிக்கடி விவகாரங்களில் சிக்கிக் கொள்பவர்களில் நடிகர் பார்த்திபன் இயக்குனர் மிஷ்கின் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். மேடையில் மைக் முன்பு நிற்கும்போது மனதில் தோன்றும் விஷயங்களை அப்படியே சொற்களாக கொட்டி விடும் மனிதர்களாக உள்ளனர்.
அவள் பெயர் தமிழரசி விழித்திரு ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மீரா கதிரவன். இப்போது ஹபீபி என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். கடையநல்லூரில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலை பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஈசாவும் கதாநாயகியாக மாளவிகா மனோஜூம் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இயக்குனர் மீரா கதிரவன் ஓடக்கூடிய படத்தை இயக்கவில்லை. ஓட வேண்டிய படத்தை இயக்கியுள்ளார். ஹபீபி மூலம் பெரிய வாழ்க்கையை அழகான காதல் மூலம் கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு பின் மீரா கதிரவன் ஓய்வு பெற்று விடலாம். இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்து விட்டால் சினிமாவில் வந்த வேலை முடிந்தது.
இது ஒரு மேன்மையான திரைப்படம். மென்மையான திரைப்படம். இலக்கியம் தெரிந்த படைப்பாளியாக தன் கடைசி காட்சியில் மிளிர்கிறார். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா நல்ல கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷை விட சிறந்த நடிகர் கஸ்தூரிராஜா என்று இயக்குனர் மிஷ்கின் அந்த விழாவில் பாராட்டி பேசி இருக்கிறார்.
இயக்குனர் கஸ்தூரிராஜாவை பாராட்டும் விதமாக பேசிய நேரத்தில் நடிகர் தனுஷை விட அவர்தான் சிறந்த நடிகர் என்று மிஷ்கின் கிண்டலடித்து விட்டாரா என்று வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் தேரை இழுத்து இப்படி தெருவில் விட்டுட்டாரே என்றும் மிஷ்கினை கிண்டல் அடிக்கின்றனர். மனம் திறந்து ஒருவரை பாராட்டுவது கூட குற்றமா என்றும் சில ரசிகர்கள் அதற்கு பதிலடி தந்து வருகின்றனர்.





