- Advertisement -
Homeபொழுதுபோக்குவாட்ச் தங்க மோதிரம் என வள்ளல் வாரிசாக மாறிய இயக்குனர்? சத்தியவான் சாவித்திரி பிரஸ்மீட்டில் பிரபல...

வாட்ச் தங்க மோதிரம் என வள்ளல் வாரிசாக மாறிய இயக்குனர்? சத்தியவான் சாவித்திரி பிரஸ்மீட்டில் பிரபல நடிகைக்கு பரிசளித்த மிஷ்கின்!

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது டோரதி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இயக்குனர் மிஷ்கின் தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார். ஏற்கனவே டோரதி படத்தில் இரட்டை ஹீரோக்களாக நடித்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகிய இருவருக்கும் தங்க மோதிரங்களை பரிசளித்து இயக்குனர் மிஷ்கின் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதலில் கையில் கட்டியிருந்த வாட்ச்களை கழட்டி பரிசளித்த மிஷ்கின் இப்போது தங்க மோதிரங்களை பரிசளித்து வருகிறார்.

சற்று முன்