தமிழ் சினிமாவில் எப்போதுமே அதிகம் உணர்ச்சி வசப்பட்டு, உடனுக்குடன் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குபவர் இயக்குனர் மிஷ்கின். துப்பறிவாளன் பட பிரச்சனையில் இவர் விஷாலை திட்டியதை யாரும் மறக்கவே முடியாது. அந்த காணொளியில், விஷால் ஒரு பொறுக்கி என்று மிஷ்கின் போயிருப்பார். சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் அந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது.
துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையை இருவரின் மனஸ்தாபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தை விஷாலே இயக்கும் முடிவுக்கு வந்தார். அந்தப் பிரச்சினை அப்படியோடு விட்டுப் போக, அவ்வப்போது ஏதாவது ஒன்று பேசி மிஷ்கின் டிரெண்ட் ஆவார். கடைசி விவசாயி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல், தேனியில் இருக்கும் இயக்குனர் மணிகண்டனின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்தினார். தான் புத்தகங்களை விரும்பி படிப்பவன் என்று அவ்வப்போது அவர் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர், யூத் பட இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது ஆல்தோட்ட பூபதி பாடல் உருவான கதையை அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
அந்தப் படத்தில் இறுதிக் காட்சியில் வரும் பாடலை, முதலில் வாலி தான் எழுதி இருந்தார் என்றும், தனது நண்பர் கபிலன் எழுதிய ஆல்தோட்ட பூபதி பாடலை அதில் எப்படியாவது இடம்பெற செய்திட வேண்டும் என்று தான் துடித்ததாகவும் கூறி இருந்தார். அதற்கு இயக்குனர் மறுத்ததால் கடைசி நேரத்தில், பாடல் பாடப்படும் போது அதற்கான பேப்பரை தான் மாற்றியதாக மிஷ்கின் தெரிவித்தார்.
இப்படி அவ்வப்போது ஏதாவது ஒரு கதையை கூறி வரும் அவர், தற்போது திரைப்படங்களில் நடிக்கவும் செய்கிறார். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் மிஷ்கின் நடித்திருந்தார். அவர் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் எனும் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க டெவில் எனும் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஆதித்யா என்பவர் இயக்கி இருக்கிறார். இதில் விதார்த் பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டெவில் படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய மிஸ்கின் நடிகை பூர்ணாவை புகழ்ந்து தள்ளினார். ஏற்கனவே அவருடன் சவரக்கத்தி திரைப்படத்தில் மிஷ்கின் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகை பூர்ணாவை பார்க்கும் போதெல்லாம் அடுத்த ஜென்மத்தில் இவரது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று தான் தோன்றும். அந்த அளவுக்கு இவர் நல்லவர் என்று தெரிவித்துள்ளார். மிஷ்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





