- Advertisement -
Homeபொழுதுபோக்குதெருநாய்களை விடுங்க… கழுதை பத்தி யோசிங்க, நடிகர் கமல்ஹாசன் பேசியதை கேட்டு தலைசுத்திப் போன...

தெருநாய்களை விடுங்க… கழுதை பத்தி யோசிங்க, நடிகர் கமல்ஹாசன் பேசியதை கேட்டு தலைசுத்திப் போன செய்தியாளர்கள் – ஆண்டவரே எம்பி ஆகியும் நீங்க மாறலையா?

- Advertisement -

நமது நாட்டில் தெருநாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்படும் ரேபிஸ் என்னும் கொடிய பாதிப்புக்கு ஆளாகி இறக்கின்றனர். குறிப்பாக பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் நாய்க்கடியால் கடும் பாதிப்படைகின்றனர். இதனால் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து வைக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்கு ஒரு தரப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏதோ ஒரு சில நாய்கள் கடித்துவிட்டது என்பதற்காக ஒட்டுமொத்த நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டுமா, இந்த பூமி என்பது மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் அல்ல, சகல ஜீவராசிகளும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளவை என்று பிராணிகள் நல அமைப்பினரும் நாய் நேசிப்பாளர்களும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட நீயா நானா நிகழ்ச்சியிலும் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட்டது. இதில் நாய் நேசிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மீதும் சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் படவா கோபி, நடிகை அம்மு போன்றவர்களும் தனியாக வீடியோ வெளியிட்டு தங்கள் தரப்பு விளக்கங்களை கூறியிருந்தனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த செய்தியாளர்கள், தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, ஓட்டை காணோம் வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்.

- Advertisement -

அதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் உலக சரித்திரம் தெரிந்தவர்கள் சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்வார்கள். நமக்காக பொதி சுமந்து வந்த கழுதையை காணவில்லை. அது குறித்து யாரேனும் கவலைப்படுகிறீர்களா? கழுதைகளை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா?

எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து என்று நடிகர் கமல்ஹாசன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். வழக்கமாக கமல்ஹாசன் இப்படிதான் கேட்கிற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் வார்த்தைகளில் விளையாட்டு ஜாலம் காட்டி குழப்பத்தில் தள்ளுவார். இப்போது ராஜ்ய சபா எம்பி ஆன பிறகும் மாறாமல் அப்படியே பேசுகிறாரே என பலரும் தலை சுத்துவதாக கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்