நடிகர் விஜய் சேதுபதி நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் பாண்டிராஜ்.
தலைவன் தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் வருகிற 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சஞ்சனா அனந்திகா மிஷ்கின் சாண்டி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
குடும்ப பின்னணியில் ஃபேமிலி டிராமாவாக காமெடி கலந்த ஒரு எண்டர்டெயின்மென்ட் படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அவர் பரப்புரை செய்த சமயத்தில் கன்னியாகுமரி சென்ற போது மக்கள் எழுச்சி சுனாமியாக இருந்ததை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ஒரு சீட்டு ரெண்டு சீட்டு என சிலர் ஏளனம் செய்த போது அப்படி எல்லாம் இருக்காது என்று நான் அன்றைக்கே கூறினேன்.
அப்போதே இதைச் சொல்ல வேண்டியது தானே? ஜெயித்த பிறகு இப்போது கூறுகிறீர்களே என்று சிலர் இப்போது என்னை பார்த்து சொல்வார்கள். இருந்த போதிலும் தேர்தல் சமயத்தில் ஒரு சார்பு நிலையை யாரும் எடுக்க முடியாது. ஏனெனில் உதயநிதி குடும்பமும் எனக்கு நன்றாக தெரியும்.
இந்த சூழலில் தமிழக முதலமைச்சரிடம் நான் எந்த விதமான கோரிக்கையும் கேட்கப்போவதில்லை. தூரமாக இருந்து அவரின் செயல்பாடுகளை ரசிப்பேன். நான் எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வர மாட்டேன் என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். சவரக்கத்தி நந்தலாலா டிராகன் லியோ வணங்கான் எல்ஐகே என தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





