- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய கதை... யார் காகம்?... யார் பருந்து?... நெல்சன்...

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய கதை… யார் காகம்?… யார் பருந்து?… நெல்சன் கூறிய விளக்கம் இதோ…

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அண்ணாத்த திரைப்படத்துக்கு பிறகு, ரஜினிக்கு ஜெயிலர் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்திருக்கிறது. இதேபோல் பீஸ்ட் படுதோல்வியால் துவண்டு கிடந்த இயக்குனர் நெல்சனுக்கும், இந்த திரைப்படம் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஏற்கனவே முன்பதிவில் வசூல் சாதனை புரிந்த செய்த திரைப்படம், தற்போது வெளியான பிறகு படுஜோராக கல்லா கட்டி வருகிறது. ஜெயிலர் ரிலீஸான முதல் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 26 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, தளபதி விஜய் நெல்சனுக்கு செல்போனில் மெசேஜ் செய்து பாராட்டியுள்ளார். இதேபோல் ஜெயிலரை திரையரங்கில் பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், இயக்குனர் நெல்சரை வாழ்த்தியிருக்கிறார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் திரையரங்குகளில் தொடர்ந்து கூட்டம் அதிகம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் குறித்து யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கும் இயக்குனர் நெல்சன், இந்த திரைப்படத்தை ரசிகர்கள், ரஜினி படமாக தான் பார்க்க வேண்டும் என எண்ணினேன். எனக்கு எப்போதும் பிடித்த திரைப்படம் என்றால் அது அண்ணாமலையும் பாட்ஷாவும் தான். அதிலிருந்து 50 சதவீதம் ஆவது ஜெயிலரில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சத்யம் திரையரங்கில் அமர்ந்து படத்தை பார்க்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் எல்லாம் வரவில்லை. ஆனால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ரஜினி கூறிய பருந்து காகம் கதை குறித்தும் நெல்சன் விளக்கம் அளித்தார். ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காகம் எத்தனை உயரத்தில் பறந்தாலும் அதனால் பருந்தை வீழ்த்த முடியாது என்று கூறியிருந்தார். இவரது இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், நடிகர் விஜய்யைதான் ரஜினிகாந்த் காகம் என்று மறைமுகமாக கூறியதாக, ரசிகர்கள் கூறி வந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நெல்சன், அது எப்படி விஜயை பற்றி ரஜினி சார் கூற முடியும். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இதை சிலர் வேணும் என்று தனக்கு ஏற்றது மாதிரி மாற்றிக் கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ரஜினி சார் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு அருமையான மனிதர். அடுத்தவர்களை தாக்கி பேசும் எண்ணம் அவர் மனதில் துளி கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்