- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம், அமெரிக்காவில் நடந்து வரும் லுக் டெஸ்ட்...

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம், அமெரிக்காவில் நடந்து வரும் லுக் டெஸ்ட் – படம் குறித்து கசிந்த லேட்டஸ்ட் தகவல், அம்மாடியோவ்!

- Advertisement -

இயக்குனர் அட்லி ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர். ராஜா ராணி படம்தான் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முதல் படம். ஆர்யா நயன்தாரா ஜெய் நஸ்ரியா சந்தானம் சத்யராஜ் சத்யன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை அட்லி ஈர்த்துவிட்டார்.

அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் தெறி மெர்சல் பிகில் என 3 படங்களை இயக்கிய அட்லிக்கு இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அட்லிக்கு இந்தியில் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அவர் பாலிவுட்டில் இயக்கிய ஜவான் படமும் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இப்போது ஒரு படத்தை இயக்க ரூ. 100 கோடி அட்லி சம்பளம் வாங்குகிறார்.

இயக்குனர் அட்லி இயக்கும் 6வது படம், புஷ்பா புஷ்பா 2 படங்களில் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படம் என இருவரும் இணையும் இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அட்லி அல்லு அர்ஜூன் காம்போவில் புதிய படத்தை இயக்கும் அறிவிப்பை வீடியோ வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியது. அறிவியல் புனைவு கதையாக இந்த படம் உருவாகிறது. அந்த வீடியோவில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விஎப்எக்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அட்லி அல்லு அர்ஜூன் ஆகியோர் சென்று அங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்களை சந்திக்கும் காட்சிகளும் இருந்தன.

இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் ஒருவருக்கு மிர்ணாள் தாகூர் ஜோடியாகவும் மற்றொருவருக்கு ஜான்வி கபூர் ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. முதலில் பிரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்ட நிலையில், கால்ஷீட் இல்லாததால் இவர்கள் இருவரும் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இப்போது லேட்டஸ்ட் தகவலாக அட்லி இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் மொத்தம் 3 வேடங்களில் நடிப்பதாக ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 3 கேரக்டர்களில் ரஜினி மூன்று முகம் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வமகன் படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். கமல் 4 வேடங்களில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் அட்லி 3 வேடங்களில் அல்லு அர்ஜூனை எப்படி எல்லாம் காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் துவங்கி விட்டது.

சற்று முன்